PUBLISHED ON : ஜூன் 19, 2026 01:59 AM

சென்னை திருவொற்றியூர், பெரியார் நகரில், அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில், பெண்களுக்கு இலவச புடவைகள் வினியோகிக்கப்பட்டன. அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்படவே, எம்.எல்.ஏ., புறப்பட்டு விட்டார். புடவைகளை வழங்கி முடிப்பதற்குள், த.வெ.க.,வினர் திணறி விட்டனர்.
இதை பார்த்துக் கொண்டிருந்த இளம் நிருபர் ஒருவர், 'தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் இத்தனை ஆண்டு காலம் எந்த பிரச்னையும் இல்லாமல், எப்படி புடவைகளை கொடுத்தாங்க?' என கேட்டார்.
இதை கேட்ட சீனியர் நிருபர், 'இப்ப கட்சியில் இணைஞ்சிருக்கிற அ.தி.மு.க.,வினரிடம், இது சம்பந்தமா த.வெ.க.,வினர் டியூஷன் கத்துக்கணும் பா' என பதிலளிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
