PUBLISHED ON : பிப் 27, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
சென்னை, வில்லிவாக்கம் ஒன்றியம், கரலப்பாக்கம், வெள்ளானுார் ஊராட்சிகளில், ரேஷன் கடை, பள்ளி கட்டடங்கள் திறப்பு விழாவில், மாதவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம் பங்கேற்றார்.
அப்போது, அவரை சந்தித்த நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்கள், தங்களுக்கு சம்பளம் சரியாக கிடைப்பதில்லை என, முறையிட்டனர். அவர், 'இதற்கு மத்திய அரசின் அலட்சியம் தான் காரணம். தமிழக அரசு, உங்களுக்காக போராடி வருகிறது.
'வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியை, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். உங்கள் பிரச்னைக்கு அப்போது தான் தீர்வு கிடைக்கும்' என்றார். மேலும், பெண் தொழிலாளர்களுக்கு தலா, 50 ரூபாய் வழங்கினார்.
மூதாட்டி ஒருவர், 'இது எதுக்கு அட்வான்ஸ்... சம்பளத்திற்கா அல்லது லோக்சபா தேர்தலில் ஓட்டுக்கா...' என, சக பெண்களிடம் அப்பாவியாய் கேட்டபடி நடந்தார்.


