தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'பணம் வேண்டாம்னு சொல்வாரோ?'

 'பணம் வேண்டாம்னு சொல்வாரோ?'

 'பணம் வேண்டாம்னு சொல்வாரோ?'


PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ராஜ்யசபா உறுப்பினராக இருந்தபோது, அவரது எம்.பி., நிதியில் இருந்து, 35 லட்சம் ரூபாய் மதிப்பில், துாத்துக்குடி மாவட்டம், கடம்பூர் கே.சிதம்பராபுரத்தில், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த இந்த பூங்காவின் திறப்பு விழாவில், ம.தி.மு.க., முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.,யுமான துரை பங்கேற்று, பூங்காவை திறந்து வைத்தார்.

அவர் பேசும்போது, 'மக்கள் ஜாதி, மதம், அரசியல் கட்சிகளை கடந்து, நல்லவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். ஓட்டு போட பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; ஆனால், பணம் கொடுத்தவனுக்கு ஓட்டு போடாதீர்கள். அவர்கள் கொடுத்தது உங்கள் பணம் தான்...' என, ஆவேசமாக பேசினார்.

கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், 'வர்ற சட்டசபை தேர்தலில், நம்ம கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள்ல, ஆளுங்கட்சியினர் பணம் தந்தாலும், வேண்டாம்னு சொல்லிடுவாரோ...?' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us