Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு: கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில், நம் முதல்வர் தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முன்னோடியான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக, ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.

முதல்வரை புகழ்வதில் அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சராக இவர் திகழ்வது நல்லாவே தெரியுது!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன்திருப்பதி அறிக்கை: சினிமாவில் இருந்து முதல்வராகும் எண்ணத்தில் இருப்போரின் கனவுகளை பொய்யாக்க வேண்டும் என, அமைச்சர் அன்பரசன் கூறி உள்ளார்.உதயநிதி முதல்வராக முடியாதுஎன்கிறாரா அல்லது முதல்வராக அவர் எண்ணினால் அதை முறியடிக்க வேண்டும்என்கிறாரா? இரண்டுமே இல்லை என்றால், உதயநிதி ஒரு நடிகரே இல்லை என்கிறாரா? ஏன் உதயநிதி மீது இவ்வளவு கோபம் அன்பரசனுக்கு?

சபாஷ்... இதுல எந்த கேள்விக்கும் அன்பரசனால் பதில் சொல்ல முடியாது... சொன்னா அவர் அமைச்சராக நீடிக்கவும் முடியாது!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: திருமழிசை பேரூராட்சிதலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., கவுன்சிலர்களே தி.மு.க.,வுக்கு ஓட்டளித்துள்ளனர். இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பழனிசாமி ஒதுங்கி, தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தார். நாங்கள் தி.மு.க.,வை வெற்றி பெற வைத்திருக்கிறோம் என்கின்றனராம்.

இவரை நேரில் வந்து பார்த்து சொல்லிட்டு போயிருப்பாங்களோ?

தமிழ்நாடு கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமார் பேட்டி: இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 18 வகையான தொழிலாளர் வாரியங்கள் உள்ளன. கட்டுமான தொழிலாளர் வாரியத்தில்தற்போது, 24 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இன்னமும் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்என இலக்கு நிர்ணயத்துள்ளோம். வெளி மாநிலத்தில்இருந்து, இங்கு வந்து கட்டடபணி செய்து வரும் தொழிலாளர்கள், கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினராகசேரலாம். இதுவரை 6,000 வெளிமாநில தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்களை சேர்க்கிறது முக்கியமில்லை... அவங்களுக்கு முறையா நலத்திட்ட உதவிகளை வழங்கணும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap