Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'தி.மு.க., என்பது, நீதி கட்சியில் இருந்து வந்தது. அதேபோல் மக்கள் நீதி மய்யத்திலும், நீதி இருக்கிறது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் சேர்ந்ததற்காக எங்களை விமர்சிக்கின்றனர்' என, கமல் பேசி உள்ளார். 'அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து, நீதி கேட்க கட்சி ஆரம்பிக்க, நிதி தாருங்கள்' என வேண்டுகோள் வைத்த கமல், இருக்க வேண்டிய இடம் தி.மு.க., தான். ஏனெனில் அங்கே தான் நிதி இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு சீட்களுடன், நோட்டுகளையும் வாரி வழங்கும் கட்சி தி.மு.க., தான் என்பதை சுட்டிக்காட்டுகிறாரோ?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேட்டி: த.வெ.க., தலைவர் விஜய்க்கு நான் சொல்லும், 'அட்வைஸ்' என்ன வென் றால், நல்ல பாதையில் செல்லுங்கள்; தைரியமாக முன்னேறுங்கள்; மக்களுக்காக செய்யுங்கள். 'எங்களுக்காக எதாவது செய்யுங்க, உங்களை எங்கே கொண்டு சென்று வைக்க வேண்டுமோ வைக்கிறோம்' என மக்கள் சொல்கின்றனர். அதை தான் நானும் சொல்கிறேன்.

பொது தேர்வு ல நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியருக்கு, விஜய் பரிசெல்லாம் குடுத்தாரே... அதுக்காகவே, அவரை மக்கள் முதல்வராக்க மாட்டாங்க ளா ?

தமிழக காங்., பொதுச் செயலர் ரமேஷ்குமார் அறிக்கை: சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய கல்வி அமைச்சர் தர் மேந்திர பிரதான், 'புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே, நிதியை விடுவிப் போம்' என்றார். பா.ஜ.,வுக்கு, தன் சித்தாந்தத்தை பரப்ப வேண்டும். அது மட்டுமே ஒற்றை இலக்கு. அதற்காக, யாருக்கு, என்ன இழப்பு ஏற்பட்டாலும் துளியும் கவலையோ, அக்கறையோ இல்லை. அந்த வகையில், இப்போது மாணவர்களின் கல்வி, ஆசிரியர்களின் எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ள து.

'மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்காலம் மத்தி ய பா.ஜ., அரசால பாழா போயிடுச்சு'ன்னு தேர்தல்ல பிரசாரம் செய்ய காங்., திட்டம் போட்டிருக்குன்னு நல்லாவே தெரியுது!



சமீபத்தில், அ.தி.மு.க., விலிருந்து தி.மு.க.,வுக்கு தாவிய மருது அழகுராஜ் பேட்டி: விண்ணை முட்டுகிறது விலை வாசி என்கிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. இதற்கு அவர் முட்ட வேண்டிய இடம், அவரது டில்லி எஜமானர்களிடம் தான். விலைவாசி உயர் வுக்கு, அடிப்படை காரணியான பெட்ரோல், டீசல் விலை, சர்வதேச சந்தையில் வெகுவாக குறைந்தபோதும், இங்கே விலை குறைப்பு செய்யாத, பா.ஜ., அரசிடம் தானே அவர் கேள்வி கேட்க வேண்டும்?

'பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, 5 ரூபாய் குறைக்கப்படும்' என, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என்பதற்கு, இவர் விளக்கம் தருவாரா?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us