Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : டிச 05, 2025 03:20 AM


Google News
Latest Tamil News
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி:

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தமிழகத்தில் மதுவால் இளம் விதவையர் அதிகரிப்பதாக தி.மு.க., - எம்.பி., கனிமொழி பொய் பிரசாரம் செய்தார். இன்று விதவையர் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 61 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், 20,000த்துக்கும் மேலான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், மாணவியரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தான் தி.மு.க.,வின் சாதனை. எதிர்க்கட்சியாக இருந்தபோது கூச்சலிட்ட கனிமொழி, தற்போது ஏன் குரல் எழுப்பவில்லை?

தன் விரலை வச்சே, தன் கண்ணை யாராவது குத்திக்குவாங்களா?

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: காவிரி பிரச்னை, கச்சத்தீவு விவகாரம், 'நீட்' வாக்குறுதி, கல்விக்கடன் ரத்து, கூட்டுறவு வங்கிக்கடன் ரத்து என, அனைத்து பாடங்களிலும், 'பெயில்' ஆகியுள்ளது தி.மு.க., அரசு. குறைந்தபட்ச மாணவர்களாவது, 'பாஸ்' ஆவரா என பார்த்தால், ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு, இரண்டாம் வகுப்பு தமிழ் படிக்க தெரியவில்லை. முதுநிலை ஆசிரியர்கள் ஆவதற்காக, தமிழ் தேர்வு எழுதியோரும், 'பெயில்' ஆகியுள்ளனர்.

கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கே தமிழ் தெரியாத நிலையில், அப்பாவி மாணவர்களை குறை சொல்லி என்ன புண்ணியம்?

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:

'பா.ஜ.,வோடு தி.மு.க., கூட்டணி வைக்கவில்லையா' என, சிலர் கேட்கின்றனர். அ.தி.மு.க.,வால் பா.ஜ., ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நேர்மை, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கவனத்தில் வைத்து, பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது. அதன் மூலம், பா.ஜ.,வின் ஐந்தாண்டு கால ஆட்சியை காப் பாற்றிக் கொடுத்தது.

அது மட்டுமா...? வளமான துறைகளின் மத்திய அமைச்சர் பதவிகளையும், தி.மு.க.,வுக்கு கேட்டு வாங்கியதை சொல்ல மாட்டேங்கிறாரே!

தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு:

'சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு, தான் தைத்த செருப்பின் வாயிலாக துாது அனுப்பி, வெள்ளையர் முற்றுகையில் இருந்து தீரன் சின்னமலையை வெளியேறச் செய்தார் பொல்லான்' என வரலாறு கூறுகிறது. ஈரோட்டில் பொல்லான் சிலையை திறந்து வைத்து, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்தது வரவேற்கத்தக்கது.

எதிர்க்கட்சியாக இருந்தாலும், நல்லது செய்தால் வரவேற்க வேண்டும் என்ற இவரது கொள்கையை பாராட்டியே ஆகணும்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us