Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 14, 2026 03:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2026 03:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை குழு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேட்டி: சென்னை, வில்லிவாக்கத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, வீடுகளை தமிழக அரசு இடித்துள்ளது. இந்த வீடுகளுக்கு எப்படி பத்திரப்பதிவு, மின் இணைப்பு, வரி வசூல் செய்யப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விளக்க வேண்டும். குடியிருப்புகளாக மாறி, 30 ஆண்டுகள் மக்கள் வாழ்ந்த பின், ஆக்கிரமிப்பு என, தங்கள் திட்டத்திற்காக அரசே அகற்ற நினைப்பது முற்றிலும் தவறு. மனிதனின் வாழ்க்கை முக்கியமா, கண்ணாடி பாலம் போன்ற தனியார் திட்டம் முக்கியமா? கண்ணாடி பாலம் கட்டுறவங்க தரும், 'கட்டிங்'தான் முக்கியம்!

பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி: தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மாநிலம் முழுதும் தினசரி கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு, 'டாஸ்மாக்' கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் சட்டவிரோத சந்து மதுக்கடைகளே முக்கிய காரணங்களாகும். கஞ்சா, ஹெராயின் போன்ற கொடிய போதை பொருட்கள், நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் தடையின்றி கிடைக்கின்றன. இதை, முதல்வர் ஸ்டாலின் தடுக்காமல், தினசரி விளம்பரங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையை, 'திராவிட மாடல் 2.0' ஆட்சியில் பார்த்துக்கலாம்னு முதல்வர் நினைச்சிட்டாரோ?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு: 'மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை' என வாக்குறுதி அளித்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் வழங்கினார். அதையும் அனைத்து மகளிருக்கும் வழங்கவில்லை. தற்போது கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜயும், தேர்தலுக்காக புதிய வாக்குறுதிகளை வெளியிடுகிறார். அதையெல்லாம் மக்கள் நம்ப வேண்டாம்.

இவரது தலைவர் பழனிசாமியும், ஏகப்பட்ட வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்காரே... அதை மட்டும் நம்பணுமா?

புரட்சி அ.தி.மு.க., என்ற கட்சியின் முதன்மை செயலர் பெங்களூரு புகழேந்தி பேட்டி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை துவங்கியது போல, எங்கள் கட்சியும் இங்கிருந்தே பிரசாரத்தை துவங்குகிறது. எங்கள் கட்சிக்கு மாநிலம் முழுதும் விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். கன்னியாகுமரியில் பழனிசாமியின் அ.தி.மு.க., அணி பலமாக இல்லை. இங்கு ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறாது. தமிழகத்தில், அ.தி.மு.க., அணிக்கு மூன்றாம் இடம் தான் கிடைக்கும்.

இவரது கட்சிக்கு மாநிலம் முழுதும் நிர்வாகிகளை நியமித்து, அ.தி.மு.க.,வுக்கு போட்டியா வேட்பாளர்களை நிறுத்த போறாரா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us