PUBLISHED ON : செப் 13, 2025 12:00 AM

சென்னை, அயனா வர த்தில் உள்ள, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தின் தொழி லாளர் ஈட்டுறுதி பிரிவில், நேரடியாக நியமனம் செய்யப்பட்ட உதவியாளர் தரணி வாசுதேவன்:
கடலுார் மாவட்டம், எறும்பூர் தான் சொந்த ஊர். பெற்றோர், விவசாய கூலிகள். நான், இரு தங்கைகள் சேர்த்து குடும்பத்தில் ஐவர். எங்கள் மூவரையும் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு தான் வளர்த்தனர்.
நான், 10ம் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றதால், மேல்நிலை கல்வி செலவை அரசு ஏற்றது.
பிளஸ் 2 முடித்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் டிகிரி முடித்து, சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் ஒன்றரை ஆண்டுகள் வேலை பார்த்தேன்.
உ டன் வேலை பார்த்தவர்கள், 'டென்த், பிளஸ் 2, காலேஜில் மெரிட்டில் வந்திருக்கீங்க... நீங்க ஏன் அரசு பணிக்கான போட்டி தேர்வு எழுதக்கூடாது?' என, கேட்டனர்.
அதனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 4 தேர்வுக்கு படித்தேன். வழிகாட்டுதல் இல்லாததால், தேர்ச்சி பெற முடியவில்லை.
சிதம்பரத்தில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில், 'ஒருமுறை தான் கட்டணம். வெற்றி பெறும் வரை மீண்டும் மீண்டும் வந்து படிக்கலாம்' என்று சொல்ல, பணம் கட்டி, 2023ல் குரூப் 4 தேர்வையும், 2024ல் குரூப் 2 தேர்வையும் எழுதினேன்.
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, சிதம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் தட்டச்சு பணி கிடைத்தது. முதல் மாத சம்பளத்தை வாங்கியபோது, என் ஒட்டுமொத்த குடும்பமும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
கடந்த ஏழு மாதத்திற்கு முன், குரூப் 2 முடிவுகளும் வெளிவர, அதிலும் தேர்ச்சி பெற்றிருந்தேன். டைப்பிஸ்ட் பணியை ராஜினாமா செய்து, கடந்தாண்டு இந்த பணியில் சேர்ந்தேன்.
முத ல் தங்கை செவிலியர், இரண்டாவது தங்கை பி.ஏ., ஆங்கிலம் முடித்து, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அடுத்து, குரூப் 1 தேர்வு எழுதி உயர் பதவிக்கு செல்ல வேண்டும். கல்வியும், வேலையும் தான், எங்களை எல்லாம் கரை சேர்த்திருக்கிறது.
பெற்றோர் எங்களை அவ்வளவு கஷ்டத்திலும் படிக்க வைத்ததால் தான், நாங்கள் மூவருமே இன்று சம்பாதிக்கும் பெண்களாக தலைநிமிர்ந்திருக்கிறோம். இதை எல்லா பெண் களும் பெற வேண்டு ம்; பெற முடியும்.
வறுமை, தாண்ட முடியாத தடையுமில்லை; வாய்ப்புகள் மறுக்கப்படுவதும் இல்லை.