ADDED : ஜூன் 11, 2024 01:42 AM

பயணியர் நிழற்குடையில் மின் விசிறிகள் மாயம்
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஒதுக்கீடு செய்த நிதியில், இருக்கை வசதி, மின்விளக்கு, மின்விசிறியுடன் நவீன பயணியர் நிழற்குடை, இரு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
செங்கல்பட்டு தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பயணியர் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிழற்குடையில் பொருத்தப்பட்டிருந்த இரு மின்விசிறிகளும் மாயமாகியுள்ளன.
எனவே,பயணியர் நிழற்குடையில் மின்விசிறி பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார்,சின்ன காஞ்சிபுரம்.
சுகாதார வளாகம்
சீரமைக்கப்படுமா?
வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில், 20 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டடப்பட்டது. கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாக தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது. தண்ணீர் வசதி இல்லாததால், கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால், சுகாதார வளாகம் புதர்மண்டி வீணாகி வருகிறது.
எனவே, மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏனாத்துார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.குமரன்,
வாலாஜாபாத்.