/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பவானியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் ஆறு பவானியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் ஆறு
பவானியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் ஆறு
பவானியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் ஆறு
பவானியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் ஆறு
PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM
பவானி, தொடர் மழையால், பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. அதுமட்டுமின்றி, குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி அதிலிருந்தும் தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனால், பவானியில் அணைக்கட்டு செல்லும் தரைப்பால சாலையை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. மேலும் நேற்று காலையில் இருந்து பவானி, காலிங்கராயன்பாளையம், சித்தோடு, எலவமலை, பெரிய புலியூர், குட்டி பாளையம் ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


