/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

திருநின்றவூர்,
திருநின்றவூர் நகராட்சி, 13வது வார்டு, ராமதாசபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியின் குடிநீர் விநியோகத்திற்கான குழாயை, மின் கேபிள் புதைக்கும் பணியின்போது மின் வாரிய ஊழியர்கள் உடைத்தனர்.
இதனால், இப்பகுதிக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதை கண்டித்து, ராமதாசபுரம் பகுதி மக்கள், திருநின்றவூர் - புதுச்சத்திரம் சாலையில் நேற்று, காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் சிரமப்பட்டனர்.குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக திருநின்றவூர் போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.