/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : இன்ஜினியர், ஜனநாயக தினம் தகவல் சுரங்கம் : இன்ஜினியர், ஜனநாயக தினம்
தகவல் சுரங்கம் : இன்ஜினியர், ஜனநாயக தினம்
தகவல் சுரங்கம் : இன்ஜினியர், ஜனநாயக தினம்
தகவல் சுரங்கம் : இன்ஜினியர், ஜனநாயக தினம்
PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
இன்ஜினியர், ஜனநாயக தினம்
நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்ஜினியர்களின் பணி மகத்தானது. புள்ளியியல் நிபுணர், சிவில் இன்ஜினியருமான கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள் (செப்., 15) தேசிய இன்ஜினியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1955ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்திய, மாநில அரசின் சில கல்வி நிறுவனங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* 'செயல்கள் மூலம் பாலின சமத்துவத்தை அடைதல்' என்ற மையக்கருத்துடன் ஐ.நா., சார்பில் செப். 15ல் சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்படுகிறது.