உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 13, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
சர்வதேச அல்பினிசம் தினம்
'அல்பினிசம்' (வெண்தோல் குறைபாடு) என்பது முடி, தோல், கண்களில் மெலனின் நிறமி குறைவு காரணமாக ஏற்படும் ஒரு மரபணு கோளாறு. தோற்றத்தால் சமூகத்தில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூன் 13ல் சர்வதேச அல்பினிசம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆப்ரிக்காவில் 5000ல் ஒருவர், வட அமெரிக்கா, ஐரோப்பாவில் 20 ஆயிரத்தில் ஒருவருக்கு இப்பாதிப்பு உள்ளது. 'என் சருமத்துக்கு பெருமைப்படுகிறேன். அனைத்து சரும நிறங்களையும் கொண்டாடுகிறேன்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
