Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/ தொல்லெச்சத்தில் நுண்ணுயிரி

தொல்லெச்சத்தில் நுண்ணுயிரி

தொல்லெச்சத்தில் நுண்ணுயிரி

தொல்லெச்சத்தில் நுண்ணுயிரி

PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
முற்காலத்தில் உலகில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்தன. ஏதோ ஒரு காலத்தில் அவை அழிந்தன. அவை எப்படி அழிந்தன என்று அறிந்துகொள்வது உயிரியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமானது. இதனை அறிய உதவுபவை தொல் எச்சங்கள்.

பொதுவாக இறந்த விலங்கின் பெரும்பான்மை உடற்பகுதிகள் அழிந்துவிடும். எலும்பு, பற்கள், கொம்புகள் ஆகியவற்றின் மிச்சங்கள் மட்டுமே கிடைக்கும் அவற்றிலிருந்தே அந்த விலங்குகள் எப்படி வாழ்ந்தன என் பது பற்றிய சித்திரத்தை பெற முடியும்.

சமீபத்தில் விஞ்ஞானிகள் ரஷ்யாவின் ரேங்கல் தீவில் 4,000 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த மாமோத் (ரோமங்கள் நிறைந்த யானை) விலங்கின் தொல் எச்சத்தில் இருந்த சில பாக்டீரியாக்களின் மரபணுக்களைக் கண்டறிந்தனர். முதல் கட்டமாக அவற்றின் பற்கள், மண்டை ஓடு, தோல் ஆகியவற்றிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட 483 மரபணுக் கூறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அவற்றில் சிலவிதமான நுண்ணுயிரிகளும் காணப்பட்டன. இந்த நுண்ணுயிரிகளில் எவையெல்லாம் இந்த யானைகள் இறந்த பிறகு அவற்றின் உடலை உண்பதற்காக வந்தன, எவையெல்லாம் இந்த யானைகளுடனே அவற்றின் உடலில் வாழ்ந்தன என்பதை விஞ்ஞானிகள் தனித்தனியாகப் பிரித்தனர். இது மரபணுவியல் ஆய்வில் ஒரு முக்கியமான மைல்கல்.

ஆய்வில் பெரும் பாலான நுண்ணுயிரிகள் யானைகள் இறந்த பின்பு வந்தவைதான் என்று தெரிய வந்தது. 6 நுண்ணுயிரிகள் மட்டும் யானையோடு சேர்ந்து வாழ்ந்து இருக்க வேண்டும் என்று கண்டறியப் பட்டுள்ளது.

அவற்றுள் சில நுண்ணுயிரிகள் இன்றும் இருப்பவை தான். இவற்றை ஆராய்வது மூலம், இந்த யானைகள் எந்தக் கிருமிகளால் நோய்வாய்ப்பட்டு இறந்தன என்பதை அறிய உதவும்.

அத்துடன் நுண்ணுயிரிகள் யானையுடன் இணைந்து அவற்றின் உடலிலேயே வாழ்ந்து எப்படியெல்லாம் பரிணாமம் அடைந்தன என்பதையும் அறிந்துகொள்ள உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us