Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/வெள்ளி கிரகத்தின் முரட்டு வானிலை

வெள்ளி கிரகத்தின் முரட்டு வானிலை

வெள்ளி கிரகத்தின் முரட்டு வானிலை

வெள்ளி கிரகத்தின் முரட்டு வானிலை

PUBLISHED ON : மார் 12, 2026 07:52 AM


Google News
Latest Tamil News
தொலைவிலிருந்து பார்ப்பதற்கு வேண்டுமானால், வெள்ளி கிரகம் ரொம்ப அமைதியானது போலத் தோன்றும். ஆனால், அதன் தரைப்பகுதி ஒரு தகிக்கும் நரகம் என்கிறார்கள் விண்வெளியியலாளர்கள்.

கிட்டத்தட்ட 470 டிகிரி சென்டிகிரேடு வெப்பமும், எக்கச்சக்கமான வளிமண்டல அழுத்தமும் கொண்டது வெள்ளி. இதனால், பூமியிலிருந்து ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் வெள்ளிக்கு அனுப்பிய 40க்கும் மேற்பட்ட விண்கலன்கள், வெள்ளியின் வளிமண்டலத்தின் தாக்கத்தால், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் பழுதடைந்தன.

எனவே, விண்கலங்கள் தொடர்ந்து இயங்க, வெள்ளியின் முரட்டு வானிலை பற்றி இன்னும் நிறைய தெரியவேண்டிஉள்ளது.

அண்மையில், பிரான்சிலுள்ள சார்போன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், வெள்ளியின் தரைப்பகுதி வானிலையின் கணினி மாதிரிகளை உருவாக்கி ஆய்வு செய்தனர். வெள்ளி கிரகத்தின் பகல் பொழுது எவ்வளவு நீளமானது தெரியுமா? பூமியின் 117 நாட்களுக்குச் சமமான, நீண்ட பகலைக் கொண்டது வெள்ளி.

இத்தனை நீண்ட பகல்பொழுது உள்ளதால், வெப்பம் பெருகி, அங்கே ஒரு விந்தையான காற்று சுழற்சி உருவாகிறது. வளிமண்டல அடர்த்தியால், அங்கே நொடிக்கு ஒரு மீட்டர் தொலைவு வேகத்தில் லேசாக வீசும் காற்று கூட, தரையிலுள்ள புழுதியைப் பெருமளவில் கிளப்பி, வெப்பநிலையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக, 'டா வின்சி' போன்ற விண்கலங்களை, 'நாசா,' அனுப்ப திட்டமிட்டுள்ளது.

எனவே, கணினி மாதிரிகள் மூலம் விஞ்ஞானிகள் செய்த இந்த கண்டுபிடிப்புகள், வெள்ளியின் கரடுமுரடான சூழலை கணிக்கவும், விண்கலன்கள் அங்கே தரை இறங்கி அதிக நேரம் இயங்கவும் உதவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us