Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?

புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?

புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?

புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?

PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தற்போதைய சூழலில் கொழுப்பு சத்து என்றாலே அது உடலுக்கு தீங்கானது என்ற கருத்து உள்ளது. இது முற்றி லும் உண்மை என்றோ, முற்றிலும் பொய் என்றோ கூற இயலாது. எந்த வகையான கொழுப்புகள் உடலுக்கு நன்மை செய்யும்; எவை கெட்டது செய்யும் என்பது குறித்து பல்வே று ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஹாங்காங் பல்கலை ஆய்வாளர்கள் இது தொடர்பாக முக்கிய ஆய்வை மேற்கொண்டனர். நம் உடலில் சாதாரண கட்டிகள் முதல் புற்று கட்டிகள் வரை அனைத் தையும் எதிர்த்து போராடு பவை ரத்த வெள்ளை அணுக்கள் தான். இவற்றில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை டெல்டா காமா டி செல்கள். இவற்றை மட்டும் தனியாக எடுத்து ஆய்வகத்தில் வைத்து, விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

இவற்றை இரண்டு பிரிவு க ளாக்கினர். ஒரு பிரிவுக்கு உணவாக கொட்டைகள், அவகாடோ, ஆலிவ் எண்ணெய் ஆகிவற்றில் இருக்கும் கொழுப்பான ஒலிக் அமிலத்தை செலுத்தினர். மற்றொரு பிரி வினருக்கு பால் பொருட்கள், இறைச்சி, பனை எண்ணெய் ஆகியவற்றில் இருக்கும் பால்மிடிக் அமிலத்தை செலுத்தினர்.

சில தினங்கள் கழித்து ஆராய்ந்தபோது, ஒலிக் அமிலம் செலுத்தப்பட்ட செல்களுக்குள் உயிரியல் இயக்கம், கட்டிகளை அழிக்கும் திறனும் சிறப்பாக இருந்தன. பால்மிடிக் அமிலம் செலுத்தப்பட்ட செல்கள் உயிரியல் இயக்கம் பாதிக்கப் பட்டு, தங்களை தாங்களே அழித்துக் கொண்டன.

இந்த ஆய்வு மூலம் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள் ஒலிக் அமிலக் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொண்டு, பால்மிடிக் அமிலம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நன்மை தரும் என தெரிய வந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us