தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆப்பிரிக்க பட்டாம்பூச்சி மீன்!

ஆப்பிரிக்க பட்டாம்பூச்சி மீன்!

ஆப்பிரிக்க பட்டாம்பூச்சி மீன்!


PUBLISHED ON : மே 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உள்நாட்டு நதிகள் மற்றும் குளங்களில் வாழும், அரிய மீன் இனமாக, ஆப்பிரிக்க பட்டாம்பூச்சி மீன் உள்ளது. இதன் அறிவியல் பெயர், பாண்டோடான் புகோல்சி.

பிரபல ஜெர்மன் விலங்கியல் ஆய்வாளர் வில்ஹெம் பீட்டர்ஸ், 1877ல், இதை முதன்முதலாக கண்டறிந்தார். மீனின் விரிந்த இறக்கைகள் போலத் தோன்றும் மார்புத் துடுப்புகள் காரணமாக, இதற்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது.

இந்த மீன், 10 - 13 செ.மீ., நீளம் வளரும். இதன் உடல், தட்டையாகவும், அகலமாகவும் காணப்படும். இது, நீரின் மேற்பரப்பில் அமைதியாக மிதக்கும் பழக்கம் உடையது. அடர்ந்த தாவரங்கள் உள்ள அமைதியான நீர்ப்பரப்புகளையே விரும்பும்.

இதன் மார்புத் துடுப்புகள் அகலமாக விரிந்திருப்பதால், காண்பதற்கு பட்டாம்பூச்சியின் இறக்கைகளை நினைவூட்டும். ஆபத்து ஏற்பட்டால், நீரிலிருந்து திடீரென பாய்ந்து, குறுகிய துாரம் காற்றில் பறந்து செல்ல, அந்த இறக்கை உதவும்.

பெரும்பாலும், பூச்சிகளே இதன் முக்கிய உணவு. இது, நீர்மேல் விழும் சிறு பூச்சிகளை, வேகமாக பிடிக்கும் திறன் உடையது.

ஆப்பிரிக்காவின் நைஜர், காங்கோ, ஒகோவே போன்ற ஆற்றுப் பகுதிகளில், இது பரவலாகக் காணப்படுகிறது.

இனப்பெருக்க காலத்தில், நீரின் மேற்பரப்பில் மிதக்கும் தாவரங்களுக்கு அருகில் பெண் மீன் முட்டைகளை இடும். சில நாட்களில் அவை பொரிந்து, குஞ்சுகள் வெளிவரும்.

- -வி.திருமுகில்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us