Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வழிகாட்டி!

வழிகாட்டி!

வழிகாட்டி!

வழிகாட்டி!

PUBLISHED ON : பிப் 03, 2024


Google News
Latest Tamil News
திருச்சி, ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில், 1984ல், 2ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

வகுப்பு ஆசிரியையாக இருந்த கமலா ஒழுக்கம், நேரம் தவறாமை, பிறருக்கு உதவுதல் போன்ற நற்பண்புகளை கற்பிப்பார். அன்றாடம், நாட்டு நடப்புகளை அறியும் ஆர்வத்தை வளர்த்தார்.

அப்போது, குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது பற்றி விரிவாகவும், மக்கள் பட்ட துயரங்களை மனதில் பதியும்படியும் எடுத்து கூறினார். மாணவ, மாணவியர் துணையுடன், ஆடை, மளிகை பொருட்கள் மற்றும் நிதி திரட்டி அனுப்பி வைப்பதில் அக்கறையுடன் செயல்பட்டார். வேதனையில் தவிப்போருக்கு பரிவு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அந்த செயல் மனதில் விதைத்தது.

எனக்கு, 45 வயதாகிறது; பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறேன். நீண்ட காலத்துக்கு பின், அந்த ஆசிரியையை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் காட்டிய வழியில், வகுப்பில் என் மாணவர்களுக்கு இனிய துணையாக வழிகாட்டி வருகிறேன்.

- சி.சுபாஷினி, பெங்களூரு.

தொடர்புக்கு: 88610 43987






      Our Apps Available On




      Dinamalar

      Follow us