Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

PUBLISHED ON : மார் 30, 2024


Google News
Latest Tamil News
என் வயது, 49; இல்லத்தரசியாக உள்ளேன். கணவரின் பணி நிமித்தமாக, டில்லியில் வசித்து வந்தோம். மகள் நந்தினி, கேந்திர வித்யாலயா பள்ளியில் படித்தாள். வீட்டில், தமிழ் எழுத, படிக்க பயற்சி கொடுத்து வந்தார் அவளது பாட்டி.

பணி மாற்றலாகி, 2015ல் சென்னை வந்தோம். சிறுவர்மலர் இதழில், படக்கதை, புதிர் போட்டி பகுதிகளை பயன்படுத்தி மகளுக்கு தமிழ் வாசிக்க பயிற்சி கொடுத்தோம்; துவக்கத்தில் எழுத்து கூட்டி தான் படிப்பாள்.

தற்போது, கல்லுாரியில் இளங்கலை படிக்கிறாள். அதில் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் மொழி வகுப்பும், தேர்வும் இருந்தன. சிறப்பாக எழுதி பாராட்டை பெற்றாள். அதற்கு உந்துதலாக அமைந்தது அவளது பாட்டியும், சிறுவர்மலர் இதழும் தான். மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

என் குடும்பத்தவர், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி, தொடர்கதை, மற்றும் 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' உணவு வகைகளுக்கு ரசிகர்கள். சிறுவர்மலர் இதழ் பகுதிகள் நவரத்தினங்களாக ஜொலிக்கின்றன. குட்டி குட்டி மலர்களில் ஒளிரும் குழந்தைகளை ஒவ்வொரு வாரமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறுவர்மலர் இதழின் தமிழ் தொண்டு வாழ்க! தமிழ் அன்னைக்கு என் வணக்கங்கள்!



- விஜயலட்சுமி சுரேஷ், சென்னை.

தொடர்புக்கு: 99628 10285






      Our Apps Available On




      Dinamalar

      Follow us