PUBLISHED ON : ஏப் 13, 2024

தேவையான பொருட்கள்:
மாங்காய் சிறியது - 1பூண்டு - 1சின்ன வெங்காயம் - 15காய்ந்த மிளகாய் - 8பெருங்காயத் துாள், நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவுஉப்பு, புளி, கறிவேப்பிலை, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
நல்லெண்ணெய் சூடானதும் காய்ந்த மிளகாய், தோல் நீக்கிய பூண்டு பற்கள், துண்டாக்கிய மாங்காய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, புளி போட்டு வதக்கி ஆறியதும் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்துாள் தாளித்து, அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சுவை மிக்க 'பூண்டு மாங்காய் சட்னி' தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்; சாதத்துடன் பிசைந்து உண்ணலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்!
- வி.கவுதம சித்தார்த், விழுப்புரம்.
தொடர்புக்கு: 97156 40263