Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செங்கரும்பஞ்சாறு!

செங்கரும்பஞ்சாறு!

செங்கரும்பஞ்சாறு!

செங்கரும்பஞ்சாறு!

PUBLISHED ON : ஜன 11, 2025


Google News
Latest Tamil News
கரும்பை சுத்தம் செய்து தோல் உரித்து, சிறு துண்டுகளாக்கவும். துருவிய இஞ்சியை சிறிதளவு சேர்த்து அரைத்து வடிகட்டவும். பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவையும், குளிர்ச்சியும் தரும் கரும்பு சாறு தயார்.

இதில் உள்ள சுக்ரோஸ் உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். எளிய சர்க்கரையை உடல் எளிதாக உறிஞ்சும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். ஜீரணத்தை எளிதாக்கும். செரிமானத்தில் சமநிலை பேணும்.

இதில் உள்ள பொட்டாஷியம், வயிற்றில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கிறது. கல்லீரல் நோய்த்தொற்றுகளை எதிர்க்க உதவுகிறது. குடலை சுத்தப்படுத்தி கெட்ட கொழுப்பு அளவை குறைக்கிறது. எலும்பு, பற்களை வலுப்படுத்த உதவுகிறது. இயற்கை டையூரிடிக்காக செயல்பட்டு, உடல் நச்சுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கிறது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us