தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மழை காலத்தில் மின் அதிர்ச்சியிலிருந்து தப்பிக்க...

மழை காலத்தில் மின் அதிர்ச்சியிலிருந்து தப்பிக்க...

மழை காலத்தில் மின் அதிர்ச்சியிலிருந்து தப்பிக்க...


PUBLISHED ON : டிச 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின் கம்பிகள் செல்லும் இடங்களுக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் வெட்டுவது ஆபத்து. வெட்டுவதற்கு முன், அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்து, அந்த மின் பாதையில் மின்சாரத்தைத் துண்டித்த பிறகே மரங்களை வெட்ட வேண்டும்

* மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள் மற்றும் மின் இழுவைக் கம்பிகள் அருகில் செல்லக் கூடாது

*  தேவையில்லாமல் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்கவும். அவசியம் போக வேண்டும் என்றால், ரப்பர் காலுறைகளை அணிந்து செல்வது பாதுகாப்பானது

* மழை பெய்யும்போது, பழமையான வீடுகள் சிலவற்றில், சில இடங்களில் சுவர்களில் ஈரம் கோர்த்துக் கொள்ளும். அதுபோன்ற இடங்களில் சுவிட்ச் மற்றும் பிளக் பாயின்ட்டுகளைப் பொருத்தக் கூடாது. அங்கே இருக்கும் மின் சாதனங்களை மழை நாட்களில் தொடாமல் தவிர்ப்பது நல்லது

*  வீட்டில் பயன்படுத்தும் மின் சாதனங்கள் எதிலாவது, 'ஷாக்' அடிப்பதை உணர்ந்தால், உடனடியாக உலர்ந்த ரப்பர் செருப்பை கால்களில் அணிந்து, வீட்டுக்கு மின்சாரம் தரும் மெயின் கவிட்சை அணைக்கவும்

*  இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் 'டிவி' போன்ற மின் சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது

* வீடுகளில் மின் இணைப்பு பெறும்போதே, 'எர்த் வீக்கேஜ்' வசதிகளைச் சரியாகச் செய்ய வேண்டும். மின் இணைப்பில், 'சர்க்யூட் பிரேக்கர்'களும் பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக, 'சர்க்யூட் பிரேக்கர்' பொருத்தவும் முடியும். ஏதாவது ஓர் அறையில் மின்கசிவு ஏற்பட்டால், இந்த, 'சர்க்யூட் பிரேக்கர்' அந்த அறைக்கான மின் இணைப்பை மட்டும் துண்டித்து விடும்

*  வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, 'எர்த்' இணைப்புடன் கூடிய மூன்று பின் பிளக்குகள் மூலம் மின் இணைப்பு கொடுங்கள். இதன் மூலம், 'ஷாக்'கைத் தவிர்க்கலாம்

*   மழை பெய்யும்போது, வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும். ஈரமான கைகளோடு சுவிட்ச்களைப் போடவோ, நிறுத்தவோ கூடாது

* ஒரே பிளக் பாயின்ட்டில் பேன், மொபைல்போன் சார்ஜர், கம்ப்யூட்டர் என, எல்லாவற்றின் பிளக்கையும் சொருகக் கூடாது. மின் சாதனங்கள் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தையே தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக மின் பயன்பாடு, அவற்றை வெடிக்கச் செய்யும்.

— தொகுப்பு: ரா. அருண்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us