Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

PUBLISHED ON : ஜன 05, 2025


Google News
Latest Tamil News
இரண்டு, 'பயோபிக்' படங்களில் நடிக்கும், தனுஷ்!

தற்போது, இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், 2025ம் ஆண்டு இறுதியில், இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப் போகிறார்.

அந்த படத்தை அடுத்து, 1960களில் காமெடியன், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என, பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வந்த, நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கப் போகிறார்.

சினிமா பொன்னையா

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும், சமந்தா!

சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யா சமீபத்தில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சமந்தாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

'எனக்கும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால், இரண்டாவது திருமணத்திற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். இந்த 2025ம் ஆண்டிலேயே அந்த நல்ல காலம் பிறக்கும் என்று கருதுகிறேன்...' என்கிறார், சமந்தா.

எலீசா

சண்முக பாண்டியன் படத்தில், 'கிராபிக்ஸ்' விஜயகாந்த்!

மறைந்த நடிகர் விஜயகாந்தை, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில், விஜயின், கோட் உள்ளிட்ட சில படங்களில் காண்பித்தனர். தற்போது, விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடித்து வரும், படைத்தலைவன் என்ற படத்தில், 'கிராபிக்ஸ்'சில், விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர்.

மேலும், 'நீ பொட்டு வெச்ச தங்க குடம்...' என்ற அவரது, 'ஹிட்' ஆன பாடலையும், இந்த படத்தில் மீண்டும் பயன்படுத்தி இருக்கின்றனர்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

உச்ச நடிகர், உலக நடிகர் படங்களில், 'நெகட்டீவ்' வேடங்களில் நடித்திருந்தார், பீட்சா நடிகர். ஆனால், சமீபகாலமாக தன், 'ஹீரோ இமேஜ்' கருதி அவற்றை தவிர்த்து வருகிறார்.

இந்நேரத்தில், தன்னுடைய புதிய படத்தில் மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்க, பீட்சா நடிகருக்கு அழைப்பு விடுத்தார், உலக நடிகர். ஆனால், அதை ஏற்க அவர் மறுத்து விட்டார்.

இதன் காரணமாக, அவர்களுக்கிடையே மனக்கசப்பு உருவாகி விட்டது. இதனால், 'வில்லன் வேடம் நிஜமாலுமே என்னை வில்லன் ஆக்கிவிட்டதே...' என்ற, வருத்தத்தில் உள்ளார், பீட்சா நடிகர்.

மத்திய பா.ஜ., அரசால் எம்.பி., ஆக்கப்பட்ட பண்ணைப்புரத்து இசை அமைப்பாளர் குறித்து, 'சோஷியல் மீடியா'வில் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றன, சில எதிர்க்கட்சிகள். குறிப்பாக, அரசியல் அல்லாமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதுாறு பரப்புகின்றனர்.

இதன் காரணமாக, தேவையில்லாமல் அரசியல் வட்டத்துக்குள் சிக்கி, இப்படி கண்டவர்களால் கல்லடி படுகிறோமே என்று, 'பீல்' செய்து வருகிறார், இசை அமைப்பாளர். மேலும், தன்னைப் பற்றி வெளியாகும் அவதுாறு செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து, அதை மடைமாற்றம் செய்வதற்கென்று ஒரு குழுவை நியமித்திருக்கிறார்.

சினி துளிகள்!

* வடிவலு, சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு போன்ற, காமெடியன்களை தொடர்ந்து இன்னொரு காமெடியனான ரோபோ சங்கரும், அம்பி என்ற படத்தில், 'ஹீரோ' ஆக நடித்து வருகிறார்.

* வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த, விடுதலை - 2 படத்தை அடுத்து, ஏஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார், விஜய்சேதுபதி.

* படைத்தலைவன் என்ற படத்திற்கு இசையமைத்துள்ள இளையராஜா, ஒரு பாடலின் சூழல் அவருக்கு பிடித்துப் போகவே, அந்த பாடலை அவரே எழுதியுள்ளார்.

* நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியும், நடிகை வரலட்சுமியின் அம்மாவான சாயா, தற்போது பாலா இயக்கி உள்ள, வணங்கான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

* பீட்ஸ் படத்தை அடுத்து, மீண்டும் விஜயுடன் அவரது 69வது படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே, ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும், காஞ்சனா - 4 படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

* காதலிக்க நேரமில்லை என்ற படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார், நித்யாமேனன். அதையடுத்து, தனுஷூக்கு ஜோடியாக, இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

* தன் கணவர், சுந்தர்.சி இயக்கிய, அரண்மனை - 4 படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடினார், நடிகை குஷ்பூ. சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது, டிடி தமிழ் தொலைக்காட்சிக்காக உருவாகி வரும், 'சரோஜினி' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us