Dinamalar-Logo
Dinamalar Logo


தேடல்!

தேடல்!

தேடல்!

PUBLISHED ON : ஜூலை 14, 2024


Google News
Latest Tamil News
தெருவில் உட்கார்ந்து எதையோ தேடிக் கொண்டிருந்தார், ஒரு அம்மா. அவ்வழியாக சென்ற சிலர், 'என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டனர்.

'அந்த கேள்வி அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. நான் தேடிக்கிட்டிருக்கேன். உங்களாலே முடிந்தால் எனக்கு உதவலாம்...' என, ஞானி போல் கூறினார், அந்த அம்மா.

இந்த பதில் கேட்டு, 'எதைத் தேடுகிறோம் என்பது தெரியாமல், இப்படி ஏன் நேரத்தை செலவழிக்கிறீங்க? நாங்க எப்படி உங்களுக்கு உதவ முடியும். எங்களுக்கு ஒண்ணும் புரியலையே...' என்றனர்.

'சரி உங்களை திருப்தி செய்வதற்காக சொல்றேன். ஒரு குண்டூசி தொலைஞ்சு போச்சு. அதை தேடறேன்...' என்றார்.

கொஞ்ச நேரம் தேடி அலுத்து போனவர்கள், 'இதோ பாருங்கம்மா, இது ரொம்பவும் பெரிய, அகலமான தெரு. அதனால், குறிப்பா நீங்க எந்த இடத்திலே அந்த குண்டூசியை தொலைச்சீங்க. அதை சொல்ல முடியுமா?' என்றனர்.

'நீங்க மறுபடியும் அர்த்தமில்லாத கேள்வியைக் கேட்கறீங்க. உங்க கேள்விக்கும், நான் தேடறதுக்கும் என்ன சம்பந்தம்?' என்றார், அந்த அம்மா.

இதைக் கேட்டதும், 'என்னம்மா நீங்க பைத்தியம் மாதிரி பேசறீங்க?' என்றனர்.

'சரி, உங்களை மறுபடியும் திருப்தி படுத்தறதுக்காக சொல்றேன். அதை, நான் என் வீட்டுலே தொலைச்சுட்டேன்...' என்றார்.

'அப்புறம் எதுக்காக இங்கே வந்து தேடிக்கிட்டிருக்கீங்க...' என்று கேட்டனர்.

'ஏன்னா இங்கே தான் வெளிச்சம் அதிகமா

இருக்கு. வீட்டுக்குள்ளே இருட்டா இருக்கு.

அதனால தான் இங்கே

வந்து தேடுறேன்...' என்றார், அந்த அம்மா.

இந்தக் கதைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

வாழ்வு என்பது, புரிந்து கொள்ள முடியாத, சதா இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு செயல். அதற்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அதில், தேடுதல் என்பது ஒரு வியாதி. அது நம்மை சதா அலைய வைக்கும். பைத்தியமாக மாற்ற முயற்சி பண்ணும். ஒருக்காலும் அது நிறைவு அடையவே அடையாது.

எதையோ தேட வேண்டும் என்ற உந்துதல் நமக்குள் இருக்கும். ஆனால், குறிப்பாக எதை தேடிக் கொண்டிருந்தோம் என்பது புரியாது.

அதனால், வாழ்க்கை என்பது, சலிப்பு நிறைந்தது என்ற எண்ணத்தை உண்டாக்கி கொள்கிறோம். ஒன்றை அடைந்த பின், வேறு ஒன்றைத் தேட ஆரம்பிச்சுடுவோம். ஆக, இந்த தேடல் என்பது, நாம் ஒன்றை அடைந்தாலும், அடையா விட்டாலும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு முடிவே இல்லை.

ஏழை - பணக்காரன், நோயாளி - நோயில்லாதவன், அதிகாரம் உள்ளவன் - அதிகாரமில்லாதவன், முட்டாள் - அறிவாளி

என, அனைவரும், இதைத்தான் தேடி

சாதிக்கப் போகிறோம்.

இது தான் முடிவு என, திட்டவட்டமாக சொன்னதில்லை. ஒன்றை அடைந்ததும், மற்றொன்றை தேட ஆரம்பித்து விடுகின்றனர்.

'இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம்...' என, இதைத்தான் கூறினர்.

உங்களால், 'தேடுபவர்' உங்கள் உள்ளே தான் இருக்கிறார். அவரைத் தேடி கண்டுபிடியுங்கள்.

இதுதான், ஞானிகள் நமக்கு சொல்லும் ஆலோசனை!

- பி.என்.பி.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us