sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

1


PUBLISHED ON : மார் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2026

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எழுத்தாளர் ராணி மைந்தன் எழுதிய, 'ராஜாராம்-60!' என்ற நுாலிலிருந்து: த மிழக முன்னாள் முதல்வர், ராஜாஜி மரணமடைந்ததும் அவரது உடல், ராஜாஜி ஹாலில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று உடலை பார்க்க, ஈ.வெ.ராமசாமி விரும்பிய போது, வயது மூப்பின் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. இதை அறிந்து, அவரை சக்கர நாற்காலியில் உட்காரவைத்து அங்கு அழைத்து சென்றார், முன்னாள் சபாநாயகர், ராஜாராம்.

பிறகு, சக்கர நாற்காலியிலேயே இடுகாட்டுக்கும் போய் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டார், ஈ.வெ.ரா., அப்போது, குடியரசு தலைவராக இருந்த, வி.வி.கிரி, ராஜாஜியின் இறுதிச் சடங்கு நடந்த இடுகாட்டிற்கு வந்து, நின்று கொண்டிருந்தார்.

சற்று துாரத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஈ.வெ.ரா., அருகில் இருந்தவரிடம், 'குடியரசு தலைவர் நின்று கொண்டிருக்கும் போது, நான் இருக்கையில் அமர்ந்திருப்பது மரியாதை இல்லை. என்னை கீழே இறக்கி உட்கார வையுங்கள்...' என்று கூறி, தரையில் உட்கார்ந்து கொண்டார்.

இத்தகவலை அறிந்து, ஈ.வெ.ரா.,வின் பண்பாட்டை எண்ணி வியந்தார், வி.வி.கிரி.

*********



எழுத்தாளர், மு.கமலக்கண்ணன் எழுதிய, 'ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்!' என்ற நுாலிலிருந்து
: தி கில் மற்றும், 'சஸ்பென்ஸ்' படங்களை இயக்குவதில், உலகப்புகழ் பெற்றவர், 'ஹாலிவுட்' பட இயக்குனர், ஆல்ப்ரெட் ஹிட்ச்காக். இவர், 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். அதில், சைக்கோ மற்றும் வெர்டிகோ போன்ற ஆங்கில படங்கள், உலகம் முழுவதும் வெளியாகி, வசூலில் சாதனை படைத்துள்ளன.

இவருக்கு சினிமாவில் கிடைத்த முதல் வேலை, 'டைட்டில் டிசைனர்!' அதாவது, பேசும் படங்கள் வராத காலம் அது. படமாக்கப்பட்ட காட்சியில் நடிகர் மற்றும் நடிகையர் என்ன வசனம் பேசி நடித்தார்களோ அந்த காட்சியின் வசனத்தை ஒரு அட்டையில் எழுதி, அட்டையை சுற்றி டிசைன் செய்து தருவது தான், 'டைட்டில் டிசைனர்!' வேலை.

அன்று, வசனம் பேசப்படாத ஆங்கில திரைப்படங்களை, திரையில் பார்க்கும் மக்கள், நடிகர் மற்றும் நடிகையர் நடித்த காட்சி வரும்போது, அவர்கள் என்ன பேசினர் என்று அறிவதற்காக, வசனம் எழுதப்பட்ட அட்டையை திரையில் காட்டுவர். அதை படித்து தான், நடித்தவர்கள் என்ன வசனம் பேசினர் என்று தெரிந்து கொள்ள முடியும்.

சினிமாவில் 'டைட்டில் டிசைனர்' வேலையில் சேர்ந்த, ஆல்ப்ரெட் ஹிட்ச்காக், படிப்படியாக உயர்ந்து இயக்குனராகி, தயாரிப்பாளராகவும் உலகப்புகழ் பெற்றார்.

கடந்த, 1979ல் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட், வாழ்நாள் சாதனையாளர் விருதை, ஹிட்ச்காக்குக்கு, வழங்கி பாராட்டியது.

ஏற்புரையில் அவர் பேசியது:

என் வெற்றிக்கு அன்பும், ஊக்கமும், தொடர்ந்து ஒத்துழைப்பும் அளித்தவர்களில், குறிப்பிடத்தக்கவர்கள்...

1.என் படங்களின் எடிட்டர், 2.கதாசிரியர், 3.என் மகளின் தாய், 4.என் வீட்டு சமையலில் அற்புதங்கள் நிகழ்த்துபவர்... இந்த நான்குக்கும் சொந்தக்காரர் யார் தெரியுமா? 53 ஆண்டுகளுக்கு முன், என்னுடன் வாழ்நாள் ஒப்பந்தத்தில் இணைந்த என் மனைவி, அல்மா ரெவில் தான். அவள் மட்டும் என்னுடன் இல்லாதிருந்தால், நான், இந்த அரங்கத்தில் இன்னும் ஒரு பணியாளராக இருந்திருப்பேன், என்று கூறி, நெகிழ வைத்தார்.

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us