sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/டூர் டிப்ஸ்!

டூர் டிப்ஸ்!

டூர் டிப்ஸ்!


PUBLISHED ON : மே 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 03, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும்போது, நிறைய சில்லரை காசுகள் கையில் எடுத்துச் செல்லவும். காபி, டீ, சில இடங்களில் நுழைவுச்சீட்டு வாங்குதல் போன்றவற்றுக்கு அங்கே போய் சில்லரை தேடிக் கொண்டிருக்க முடியாது

* குளிர் பிரதேசங்களுக்கு செல்கிறீர்கள் என்றால், ஸ்வெட்டர், சாக்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம். வெயில் அதிகமுள்ள இடம் என்றால் குடை, கருப்புக் கண்ணாடி, தொப்பி எடுத்து கொள்ளவும்

* போகிற இடத்தில் உறவினர்கள் வீடுகளில் தங்குகிறீர்கள் என்றால், உங்கள் வருகையை முன் கூட்டியே அவர்களுக்கு தெரிவித்து விடுங்கள். அவர்களின் விடுமுறை நாட்களில் நாம் அங்கு செல்லுமாறு பிளான் போட்டால், அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து ஊரைச் சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும்

* சீரகம் போட்டு காய்ச்சிய வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காது. தொண்டைக் கோளாறும் ஏற்படாது. முடிந்த வரை, காய்ச்சிய தண்ணீரை குடியுங்கள்

* தலைவலி, வயிற்று வலி, தசைப்பிடிப்பு இவற்றுக்கான மாத்திரைகள், ஆயின்ட்மென்ட்டுகள், பேண்டு எய்ட், காட்டன் இவற்றை கைவசம் வைத்திருங்கள். தவிர, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் அவற்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us