Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ தண்ணீர்... தண்ணீர்!

 தண்ணீர்... தண்ணீர்!

 தண்ணீர்... தண்ணீர்!


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவில்லாமல் கூட மனிதன் ஓரிரு நாட்கள் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழ்வது சாத்தியமில்லை. தண்ணீர் அருந்துவதால் பலவித மருத்துவ பயன்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது.

* நாம் சுத்தமான தண்ணீரை தான் அருந்துகிறோமா என்று சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில், நம் அன்றாட தேவைக்காக தண்ணீரை சேமித்து வைக்கிறோம். இவ்வாறு நாம் தினந்தோறும் சேமித்து வைக்கும் தண்ணீரை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம்

* தண்ணீரை எதில் சேமித்து வைத்தாலும், அதனை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்

* திறந்த நிலையில் இருக்கும் தண்ணீரை பருகாமல் தவிர்ப்பது நல்லது

* பலரும் பாட்டில்களில் தண்ணீரைச் சேமித்து வைப்பர். அவ்வாறு, சேமித்து வைக்கும்போது, பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்வது மிகவும் அவசியம். மேலும், பாட்டிலின் உள்பகுதி மற்றும் மூடிகளை நன்றாக சுத்தம் செய்வது நல்லது

* தண்ணீரைக் குடித்தவுடன் பாட்டில்களை தவறாமல் மூடி வைக்க வேண்டும்

* நீங்கள் பாட்டிலில் வாய் வைத்து குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், மற்றவருக்கு உங்கள் பாட்டிலை பயன்படுத்தக் கொடுக்காதீர்

* நீங்கள் தண்ணீரை சேமித்து வைக்க காப்பர் அல்லது சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். இதனால், தண்ணீரின் தன்மை மாறாது. காப்பர் பாத்திரங்களில் சேமித்த தண்ணீரை அருந்துவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன

* நீங்கள் டிரம்களில் தண்ணீரை சேமித்து வைப்பவராக இருந்தால், சூரிய வெளிச்சம் படும்படி டிரம்களை வைத்து, தண்ணீரை சேமிக்க வேண்டாம் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap