Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - மொச்சைப் பயறு!

நம்மிடமே இருக்கு மருந்து - மொச்சைப் பயறு!

நம்மிடமே இருக்கு மருந்து - மொச்சைப் பயறு!

நம்மிடமே இருக்கு மருந்து - மொச்சைப் பயறு!

PUBLISHED ON : மே 26, 2024


Google News
Latest Tamil News
இஸ்ரேல் நாட்டில் விளையும் மொச்சைப் பயறு, பச்சை நிறமாகவும், அதிக இனிப்பு சுவையும் கொண்டது.

இதில், வெள்ளை மொச்சை, கறுப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை மற்றும் நாட்டு மொச்சை என, பல வகைகள் உள்ளன.

தையமின், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பி6, தாமிரம், செலினியம், இரும்புச்சத்து, நியசின், ரிபோப்ளேவின், கோலின், சோடியம், துத்தநாகம், பொட்டாஷியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது; ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்தது.

பெண்களுக்கு தினமும், போலேட் சத்து, 400 எம்.சி.ஜி.,யும், கர்ப்ப காலமாக இருந்தால், 600 எம்.சி.ஜி.,யும் தேவை. மொச்சையில் உள்ள இந்த சத்து, விரைவாக பூர்த்தி செய்கிறது. எனவே, மொச்சை பயறை, பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டியது அவசியம்.

அதிகளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் போதும், குழந்தை பிரசவித்த முதல் மூன்று மாதங்களிலும், பெண்களுக்கு ஏற்படக் கூடிய மலச்சிக்கலுக்கு, சிறந்த தீர்வாகிறது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது; மெக்னீசியம் அதிகளவு உள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

இதிலுள்ள இரும்புச் சத்து, ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது. ரத்த சோகை போன்ற இரும்புச்சத்து குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஆகியவற்றுக்கு சிறந்த உணவாக திகழ்கிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க, இதில் உள்ள நார்ச்சத்து உதவி புரிகிறது.

பெண்களின் கரு உற்பத்திக்கும், கருச்சிதைவை தடுக்கவும், மொச்சைப் பயறு இனிறியமையாதது.

மொச்சை பயறு, உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைத்து, கலோரிகளை எரிப்பதால், உடல் எடை வேகமாக குறையும்.

'பார்கின்சன்' நோயைக் கட்டுப்படுத்த, மொச்சையில் உள்ள, 'எல்டோபா' உதவுகிறது.

மொச்சையை வேகவைக்கும் போது, இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால், வாய்வு தொல்லை ஏற்படாது.

தொகுப்பு: மு. ஆதினி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us