Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

PUBLISHED ON : ஜூன் 16, 2024


Google News
Latest Tamil News
வி.ஆதித்த நிமலன், கடலுார்: டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து, புத்தகமாக வெளியிடலாமே, செய்வீரா?

தாமரை பிரதர்ஸ் வெளியிடுவர்!

* மு.இசக்கி, சென்னை: 'வாரமலர்' இதழ் தொடங்கும்போது, உங்களிடம் இருந்தது, ஆர்வமா, அச்சமா?

ஆர்வம் இன்றி, எந்த காரியத்தையும் தொடங்க முடியாது அல்லவா!

இ.கஸ்துாரி, பொட்டல்புதுார், தென்காசி: தேயிலை, காபி தோட்டம் கண்டு களித்த அனுபவம் உண்டா?

திருநெல்வேலி மாஞ்சோலையில், காபி தோட்டத்தில், காலை முதல் மாலை வரை, சாப்பாட்டு கட்டுடன் நண்பர்களுடன் அமர்ந்து அனுபவித்தது, நெஞ்சில் நிறைந்த அனுபவம்!

சி.சவுந்தர்யா, புதுச்சேரி: உங்களுக்கு, முதன் முதலில் துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்தது யார்?

நான் ஒருவரை, முதலாளி என செல்லமாக அழைப்பேன். அவர் தான், துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்தார்! அவர், லாரி தொழில் அதிபர்! அவரது லாரிகள் தான், சென்னை துறைமுகத்திலிருந்து, 'நியூஸ் பிரின்ட் ரீல்'களை, நமது எல்லா பதிப்புகளுக்கும் எடுத்துச் செல்லும்!

சி.தங்கராஜ், திருப்பூர்: லோக்சபா தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க.,வுக்கு பெருத்த அதிர்ச்சி தந்துள்ளதால், பிரிந்து கிடக்கும் அணிகள் ஒன்று சேர்ந்து, அ.தி.மு.க.,வை பலப்படுத்துமா?

அ.தி.மு.க., அடிப்படை தொண்டர்களின் விருப்பமாகத்தானே அது உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்குள் இரு அணிகளும், இணைந்து விடும்!

* கி.ரகு, மதுரை: மூட நம்பிக்கை உடையவர்களாக சிலர் இருக்கின்றனரே...

மூட நம்பிக்கை, மனிதனை முட்டாளாக்கும். நம்பிக்கையின்மை, மனிதனை பைத்தியமாக்குகிறது!

பி.ராகவன், நெல்லை: ஒரு மனிதன் எதை காக்க வேண்டும்?

ஒரு மனிதன் எதைக் காக்காவிட்டாலும், நாவைக் காக்க வேண்டும்; மீறினால், சொல் குற்றத்தில் சிக்கி துன்பப்படுவர்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us