Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

PUBLISHED ON : ஜூன் 30, 2024


Google News
Latest Tamil News
சி.சவுமியா, தர்மபுரி: ஒருவேளை, 'தினமலர்' நாளிதழ் ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், எந்த வேலைக்குச் சென்றிருப்பீர்கள், அந்துமணி?

துாத்துக்குடியில், உப்பளத்தில் உப்பை அள்ளிக் கொண்டிருப்பேன்!

* வி.ஜெயந்தி, நங்கநல்லுார், சென்னை: உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, அனைத்து அரசு பிரிவுகளிலும் பரவியிருக்கும் லஞ்சம், நம் நாட்டில் மட்டுமா அல்லது மற்ற நாடுகளிலுமா?

அனைத்து நாடுகளிலும்!

வெ.சென்னப்பன், நீலகிரி: அந்துமணிக்கு வரும் கேள்விகளில், ஒரு கேள்விக்கு பதில் அளிக்க, அந்துமணி எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?

எழுதத் தோன்றி விட்டால், ஐந்து நிமிடம்!

வி.தேவசகாயம், சென்னை: அழகான பெண், உங்களை சந்திக்க வந்தால், உங்கள், 'ரியாக் ஷன்' எப்படி இருக்கும்?

நம் அலுவலக முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியை சந்திக்கச் சொல்லி விடுவேன்!

* டி.ஜெயசிங், கோவை: நம் கருத்து பிடிக்காத கட்சித் தலைவரும், 'தினமலர்' நாளிதழை வாங்கிப் படிக்கத்தானே செய்வார்?

ஆமாம்; எதிர் கருத்துகளை தெரிந்து வைத்து, அதற்கு பதில் சொல்லவும்; தன்னைப் பற்றி என்ன செய்தி வெளியாகி இருக்கிறது என, தெரிந்து கொள்ளவும்!

டி.ஜூலியட், கோவை: பாசன கிணற்றில், 'பம்ப் செட்'டில் குளித்தது உண்டா?

நெல்லை மாவட்டம், புதுக்குடி தோட்டத்தில், 10 குதிரைத் திறன் கொண்ட, 'பம்ப் செட்'டில் ஆனந்தமாக குளித்திருக்கிறேன், நண்பர்களுடன்!

ம.வசந்தி, திண்டிவனம்: இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிந்தே போட்டியிட்டு, மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் சட்டத்தை, மாற்ற முடியாதா?

தேர்தல் ஆணையம் மனது வைத்தால் செய்யலாம்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us