PUBLISHED ON : ஜூலை 01, 2026

மேட்டுப்பாத்தியில் கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பி.சத்தியபாணி கூறியதாவது:
களிமண் நிலத்தில், நாட்டு சுரைக்காய், தக்காளி, கீரை உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், பூக்கள் சாகுபடி செய்து வருகிறேன். விளைபொருட்களுக்கு, ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், மேட்டுப்பாத்தியில் கீரை மற்றும் காய்கறி சாகுபடி செய்துள்ளேன். தரை மட்டத்திலிருந்து 1 அடி வரை மண்ணை மேடாக்கி பாத்திகள் அமைப்பதே மேட்டுப்பாத்தி முறை. இந்த முறையில் நல்ல மகசூல் கொடுக்கிறது.
குறிப்பாக, மேட்டுப்பாத்தி முறையில் கீரை, காய்கறிகள் சாகுபடி செய்யும் போது, விளைபொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும். திடீரென மழை வந்தாலும் கீரை, காய்கறிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. மேலும், காய்கறி, கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.சத்தியபாணி, 93808 57515.
