/இணைப்பு மலர்/விவசாய மலர்/விவசாயத்தில் நானே ராஜா... நானே மந்திரிவிவசாயத்தில் நானே ராஜா... நானே மந்திரி
விவசாயத்தில் நானே ராஜா... நானே மந்திரி
விவசாயத்தில் நானே ராஜா... நானே மந்திரி
விவசாயத்தில் நானே ராஜா... நானே மந்திரி
PUBLISHED ON : ஜூன் 18, 2025

வண்டி இருக்கோ இல்லையோ விவசாயி என்றால் நாட்டு மாடு இருக்க வேண்டும். இயற்கை இடுபொருள் தயாரிக்க உதவும். என்னிடம் இரண்டு நாட்டு மாடுகள் உள்ளன என்று இயற்கை விவசாயம் செய்யும் முறையை விளக்கினார் சுப்புலட்சுமி.
விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் டிகிரி முடித்து ஸ்டெனோ படித்து தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தேன். வாக்கப்பட்டதும் விவசாய குடும்பம் தான்.
வெளியில் வேலை செய்ய வீட்டினர் அனுமதிக்காததால் விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். அப்பா அடிக்கடி சொல்வார், 'யார் கைவிட்டாலும் பூமாதேவி(பூமி) நம்மை கைவிடாது' என்பார். வெங்காயம் விளைந்திருக்கும், பாதுகாக்க வழியின்றி அழுகி போய்விடும்.
'என்னப்பா இது விவசாயம்' என்று நாங்களும் அப்பாவிடம் கோபமாக கேட்டுள்ளோம். புது டிரஸ் கேட்டால், மிளகாய்ச் செடிகளை காண்பிப்பார். பழுத்திருக்கும் மிளகாய்ப் பழங்களை காட்டி 'இந்தா பாருப்பா... செடி பூரா செந்துாரமா இருக்கு. அறுவடை முடிஞ்சதும் டிரஸ் வாங்கித் தருவேன்' என்று சமாதானப்படுத்துவார்.
எங்களின் மூலாதாரமே விவசாயம் என்பதை அப்பா புரியவைத்தார். அண்ணன், தம்பி தலையெடுத்ததும் விவசாயத்தை விட்டு வெளியேறினர். நான் மட்டுமே விவசாயத்தை தொடர்ந்தேன்.
இயற்கை விவசாயி என்பதால் கள்ளிக்குடி வட்டார விவசாயிகளுக்காக வேளாண் துறை மூலம் பஞ்சகாவ்யம், மீன்அமிலம், 3 ஜி கரைசல், இயற்கை மூலிகை விரட்டி கரைசல் தயாரிக்க பயிற்சி அளிக்கிறேன். தயாரித்து விற்கவும் செய்கிறேன்.
சொந்தமாக இரண்டு ஏக்கரும், குத்தகைக்கு 10 ஏக்கர் நிலத்தில் மானாவாரி பயிர் செய்கிறேன். சொந்த நிலத்தில் பருத்தி பயிரிடுகிறேன். பருத்தி 4 மாத பயிர் என்பதால் ஊடுபயிராக மொச்சை, பாசிப்பயறு, உளுந்து பயிரிடுவேன். 45 நாட்களில் கூடுதல் வருமானம் கிடைக்கும். களை எடுக்கும் போது ஆகும் செலவு குறையும். பூச்சிகள் பருத்தியை தாக்காமல் ஊடுபயிரை தாக்குவதால் பருத்தி சேதாரமின்றி கிடைக்கும்.
பயறு பயிர்கள் நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை பொன்னாக்கும்.
பருத்தியில் வேர்பூச்சி நோய் வரும். அதன் தாக்குதலை குறைக்க மாற்றுப்பயிர் செய்ய வேண்டும். இரண்டு முறை பருத்தி பயிரிட்டால் மாற்று பயிராக சோளம் அல்லது துவரை பயிரிடுவேன். அடுத்தடுத்து பயிரை மாற்றும் போது அந்தந்த பயிர்களுக்கு தேவையான சத்துகளை எடுப்பதால் குறிப்பிட்ட சத்து பற்றாக்குறை ஏற்படுவது குறையும். துவரை பயிரிட்டால் இயந்திரம் மூலம் அறுவடை செய்யலாம்.
இங்கு காட்டுப்பன்றி, மான்களால் சேதம் அதிகம். எல்லா பயிர்களுக்கும் சேலை கட்டி பாதுகாக்கிறோம். ஆண்டுக்கு 25 சேலைகள் இதற்காக செலவு செய்ய வேண்டும். தெரிந்தவர்களிடம் பழைய சேலை வாங்கி கட்டுவோம். காட்டுப்பன்றி தாக்குதலை கட்டுப்படுத்த வியர்வை வாசனையுடைய சேலையில் அழுகிய முட்டை கரைசல், மிளகாய்ப்பொடி கரைசல் தெளித்து விடுவோம். மழை பெய்யாவிட்டால் ஒருவாரம் வரை பன்றிகள் பயிர்களை தாக்காது. தொடர்ந்து வாரம் ஒருமுறை செய்தால் தான் பருத்தி, துவரை காய்களை காட்டுப்பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற முடியும்.
ஒரு ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து பயிர்களை முழுவதுமாக மான்கள் சாப்பிட்டதால் இழப்பு அதிகமாகி விட்டது. மழை பெய்யும் போது நாம் காட்டுக்கு போகமாட்டோம் என்பதால் காட்டுப்பன்றிகள் மக்காச்சோள கதிர்கள், சிவப்பு சோளம் உட்பட எந்த பயிரையும் விட்டு வைக்காமல் தின்பதோடு ஒடித்து சேதமாக்கி விடும்.
அருப்புக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கடந்தாண்டு இயற்கை விவசாயிக்கான விருது வழங்கியதை பெருமையாக நினைக்கிறோம்.
மானாவாரி என்றாலும் உரம் பயன்படுத்துவோம். கிடை போட்டு மாட்டுச்சாண தொழுஉரம் இடுவோம். முதல் களை எடுத்ததும் பஞ்சகாவ்யம் பத்து நாட்களுக்கு ஒருமுறையும் பூப்பூக்கும் தருணத்தில் இரண்டு முறை இடைவேளையில் மீன்அமிலம் தெளிப்போம். பிஞ்சு விடும் நேரத்தில் பயறு வகைகளில் பச்சாலை நோய் தாக்கும். அதை கட்டுப்படுத்த இயற்கை மூலிகை கரைசல், 3 ஜி கரைசல் தயாரித்து தெளிக்கிறோம்.
நம்மை சுற்றியுள்ள கற்றாழை, எருக்கு, கொய்யா என எத்தனை இலைகள் கிடைக்கின்றவோ அவற்றை வெட்டி கோமியத்தில் குறைந்தது 15 நாட்கள் ஊறவைத்தால் இயற்கை மூலிகை கரைசல் தயாராகி விடும். உரச்செலவு குறைவு தான்.
எனது நிலத்தில் விளையும் பயறு உட்பட அனைத்து கதிர்களின் மணிகள் திரட்சியாக இருப்பதோடு நஞ்சற்ற விவசாயம் செய்கிறோம். விவசாயம் செய்கிறோம் என்பதை விட சமுதாயத்திற்கு நஞ்சற்ற உணவு வழங்குவதில் மனதிருப்தியாக உள்ளோம் என்றார்.
இவரிடம் பேச: 98437 94515.
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை