/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வரி பாக்கி கல்வி நிறுவனங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் வரி பாக்கி கல்வி நிறுவனங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ்
வரி பாக்கி கல்வி நிறுவனங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ்
வரி பாக்கி கல்வி நிறுவனங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ்
வரி பாக்கி கல்வி நிறுவனங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ்
ADDED : ஜூலை 21, 2024 07:18 AM
பெங்களூரு: சொத்து வரி பாக்கி வைத்துள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட, தனியார் கல்வி நிறுவனங்கள் தயாராகின்றன.
பெங்களூரில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள், சொத்து வரி பாக்கி வைத்துள்ளன. இதை செலுத்தும்படி மாநகராட்சி பல முறை அறிவுறுத்தியும் பொருட்படுத்தவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களிடம் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய் வர வேண்டியுள்ளது. எனவே மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாநகராட்சியின் நடவடிக்கையால், தனியார் கல்வி நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் முறையிட கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு தயாராகின்றன.
இதுகுறித்து, தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:
நாங்கள், ஏற்கனவே 25 சதவீதம் வரி செலுத்தி வருகிறோம். மற்ற மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு, 100 சதவீதம் வரி விலக்கு அமலில் உள்ளது. ஆனால், நம் மாநிலத்தில் 25 சதவீதம் வரி செலுத்துகிறோம்.
இப்போது 'ஒன் டைம் செட்டில்மென்ட்' சலுகை, ஜூலை 31ல் முடிகிறது. அதற்குள் வரியை செலுத்தும்படி, மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. மாநகராட்சியின் விதிமுறை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. எங்களிடம் பலவந்தமாக வரி வசூலிக்க, மாநகராட்சி முற்பட்டுள்ளது. இதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.