/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தெருவோர வியாபாரிகள் கணக்கு; பெங்களூரு மாநகராட்சி முடிவு தெருவோர வியாபாரிகள் கணக்கு; பெங்களூரு மாநகராட்சி முடிவு
தெருவோர வியாபாரிகள் கணக்கு; பெங்களூரு மாநகராட்சி முடிவு
தெருவோர வியாபாரிகள் கணக்கு; பெங்களூரு மாநகராட்சி முடிவு
தெருவோர வியாபாரிகள் கணக்கு; பெங்களூரு மாநகராட்சி முடிவு
ADDED : ஜூலை 23, 2024 11:32 PM
பெங்களூரு : தெரு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்க பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்டு எட்டு மண்டலங்கள் வருகின்றன. இந்த மண்டலங்களில் மாநகராட்சியின் அனுமதி பெற்று, தெருவோரத்தில் வியாபாரிகள் கடைகள் நடத்துகின்றனர். மாநகராட்சியின் அனுமதி பெறாமலும் சிலர் தெருவோரத்தில் கடைகள் நடத்துகின்றனர்.
இந்நிலையில் தெருவோர வியாபாரிகளை அடையாளம் காண்பது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மாநகராட்சிக்கு உட்பட்ட தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்புக்கான தரநிலை செயல்பாட்டு நடைமுறை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அந்தந்த மண்டலங்களில் தெருவோர வியாபாரிகளை கண்டறிய வேண்டும். நகரில் எத்தனை தெருவோர வியாபாரிகள் உள்ளனர் என்பது குறித்து துல்லியமாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இதற்கு தேவையான பணியாளர்களை உடனடியாக நியமித்து, குறித்த காலக்கெடுவுக்குள் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பு தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் தெரு வர்த்தகத்தை ஒழுங்கு படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் அது பற்றிய விபரம் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.