/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 1,195 பேர் மீது வழக்கு ரூ.10 லட்சம் அபராதம் 1,195 பேர் மீது வழக்கு ரூ.10 லட்சம் அபராதம்
1,195 பேர் மீது வழக்கு ரூ.10 லட்சம் அபராதம்
1,195 பேர் மீது வழக்கு ரூ.10 லட்சம் அபராதம்
1,195 பேர் மீது வழக்கு ரூ.10 லட்சம் அபராதம்
ADDED : ஜூலை 03, 2025 05:12 AM
பெங்களூரு:போக்குவரத்து விதிகளை மீறிய 1,995 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பத்து லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மேற்குப்பிரிவு போக்குவரத்து டி.சி.பி., அனிதா ஹட்டன்னவர் நேற்று அளித்த பேட்டி:
விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி வந்த 177 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 85 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறிய 1,135 பேர் மீது வழக்கு, 5.68 லட்சம் ரூபாய் அபராதம்; தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திய 363 பேர் மீது வழக்கு, 2.23 லட்சம் ரூபாய் அபராதம்; ஒரு வழிப்பாதையில் வாகனம் ஓட்டிய 39 பேர் மீது வழக்கு, 19 ஆயிரம் ரூபாய் அபராதம்; விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுநர்கள் 213 பேர் மீது வழக்கு, 69 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1,995 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.