Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

 குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

 குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு


ADDED : மே 07, 2026 12:00 AM

Follow on Google

ADDED : மே 07, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: வி ளையாட சென்ற இரண்டு சிறார்கள், விவசாய குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோலார் மாவட்டம், பங்கார்பேட் தாலுகாவின், போடேனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் வரதராஜு, ஷியாமளா தம்பதி மகன் கார்த்திக், 8. இவர், மூன்றாம் வகுப்பு படித்தார்.

பாபு மற்றும் ரூபா தம்பதியின் மகள் தனுஸ்ரீ, 15. இவர், உறைவிட பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்தார். இம்முறை தேர்வில் 86 சதவீதம் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றிருந்தார்.

கார்த்திக்கும், தனுஸ்ரீயும் தங்கள் பாட்டி மற்றும் தாயுடன் நேற்று மதியம் தோட்டத்துக்கு சென்றிருந்தனர். அப்போது இருவரும் அங்கிருந்த விவசாய குட்டை அருகில் விளையாட சென்றனர்.

அப்போது கார்த்திக் கால் தவறி, குட்டையில் விழுந்தார். இவரை காப்பாற்ற முயற்சித்த தனுஸ்ரீயும் நீரில் விழுந்து, இருவரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த காமசமுத்ரா போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், இருவரின் உடல்களை மீட்டனர். தாசில்தார் சுஜாதா, கல்வி அதிகாரி சசிகலா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap