ADDED : ஜூன் 17, 2025 08:13 AM

பெங்களூரு : கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கர்நாடகா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் நேற்றைய அறிக்கை:
கர்நாடகாவில் நேற்று மட்டும் 208 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 103 பேர் குணமடைந்தனர். 386 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சதவீதம் 53.8 சதவீதம் பேர்.
மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 696. இதில், நான்கு பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.