/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு தசரா விழாவுக்கு 25 யானைகள் தேர்வு மைசூரு தசரா விழாவுக்கு 25 யானைகள் தேர்வு
மைசூரு தசரா விழாவுக்கு 25 யானைகள் தேர்வு
மைசூரு தசரா விழாவுக்கு 25 யானைகள் தேர்வு
மைசூரு தசரா விழாவுக்கு 25 யானைகள் தேர்வு
ADDED : ஜூலை 02, 2025 11:23 PM

மைசூரு: மைசூரு தசராவில் பங்கேற்பதற்காக முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 25 யானைகளை வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
நடப்பாண்டு மைசூரு தசரா விழா 11 நாட்கள் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தசராவின் ஜம்பு சவாரியில் பங்கேற்கும் 15 யானைகளை தேர்வு செய்யும் பணி கடந்த மாதம் துவங்கியது. ஆறு யானைகள் முகாம்களை பார்வையிட்ட கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் அடங்கிய குழு, 25 யானைகள் பட்டியலை தயார் செய்தது.
இந்த யானைகளை மைசூரு மண்டல வன அதிகாரி மாலதி பிரியா, துணை வன அதிகாரி பிரபு கவுடா மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின், யானைகளுக்கு சுகாதார பரிசோதனை நடத்தப்பட்டு, சுகாதார அட்டை வழங்கப்பட்டன. சுகாதார அட்டையில், யானையின் வயது, எடை, உடல் நிலை, குணம், முகப்பரு நிலை, பெண் யானைகளின் கர்ப்ப நிலை உள்ளிட்ட தரவுகள் இருக்கும்.
ஜம்பு சவாரியில் பெண் யானைகளும் பங்கேற்கும் என்பதால், அவற்றுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அவற்றின் சிறுநீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
இந்த அறிக்கைகள் கிடைத்த பின், இறுதியாக ஜம்பு சவாரியில் பங்கேற்கும் 15 யானைகள் தேர்வு செய்யப்பட்டு, 20ம் தேதிக்கு பின் அறிவிக்கப்படும்.
25 யானைகள் எவை?
மத்திகோடு முகாம்: பீமா, ஸ்ரீகாந்த், பார்த்தா, அபிமன்யு
துபாரே முகாம்: தனஞ்செயா, பிரசாந்த், கஞ்சன், சுக்ரீவா, ஸ்ரீராமா, ஹர்ஷா, அய்யப்பா, ஹேமாவதி
தோடஹரவே முகாம்: ஏகலவ்யா, லட்சுமி
பீமனகட்டே முகாம்: கணேஷ், ஸ்ரீரங்கா, ரூபா
பலே முகாம்: மகேந்திரா
பண்டிப்பூர் முகாம்: ஹிரண்யா, லட்சுமி, ரோஹித், பார்த்தசாரதி, ஐராவத்
ஹாரங்கி முகாம்: லட்சுமண், ஈஸ்வரா
கடந்தாண்டு எடுக்கப்பட்ட யானைகளுடனான குழு படத்தை, பாகன்களிடம், மைசூரு மண்டல வன அதிகாரியும், தமிழருமான மாலதி பிரியா வழங்கினார்.