Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பட்டப்பெயர் சொல்லி கிண்டல் ரவுடியை கொன்ற 3 பேர் கைது

பட்டப்பெயர் சொல்லி கிண்டல் ரவுடியை கொன்ற 3 பேர் கைது

பட்டப்பெயர் சொல்லி கிண்டல் ரவுடியை கொன்ற 3 பேர் கைது

பட்டப்பெயர் சொல்லி கிண்டல் ரவுடியை கொன்ற 3 பேர் கைது

ADDED : அக் 11, 2025 11:02 PM


Google News
ராம்நகர்: பட்டப்பெயர் சொல்லி கிண்டல் செய்த ரவுடியை கொலை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, கெங்கேரி ஹெம்மிகேபுராவை சேர்ந்தவர் சிரஞ்சீவி, 25; ரவுடி. கடந்த ஆண்டு தலகட்டபுராவில் நடந்த கொலை வழக்கில் சிறையில் இருந்தார்.

கடந்த ஆகஸ்டில் ஜாமினில் வெளியே வந்தார். பின், மனைவியின் ஊரான ராம்நகரின் கனகபுரா பிச்சனகெரே கிராமத்தில் வசித்தார்.

கடந்த 6ம் தேதி இரவு, வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில், பத்ரேகவுனடதொட்டி என்ற கிராமத்தில் கொலையாகி இறந்து கிடந்தார். அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

தலகட்டபுராவில் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. சிரஞ்சீவி, தன் பாட்டி ஊரான பத்ரேகவுடனதொட்டியில் வசிக்கும் சிலரிடம் தகராறு செய்ததும், போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த தொட்ட ரவி, 35, பிரஜ்வல், 23, பவன், 24, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

சிரஞ்சீவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். சிரஞ்சீவி, இவர்கள் மூன்று பேரிடமும் தகராறு செய்துள்ளார்.

ஊர் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர். பின், அனைவரும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

மது அருந்தும்போது எல்லாம், பவனை அவரது பட்டப்பெயரான 'காக்கா பீ' என்று சொல்லி சிரஞ்சீவி கிண்டல் செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பவன், நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us