Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாக்கடையில் விழுந்து 4 வயது சிறுவன் பலி

சாக்கடையில் விழுந்து 4 வயது சிறுவன் பலி

சாக்கடையில் விழுந்து 4 வயது சிறுவன் பலி

சாக்கடையில் விழுந்து 4 வயது சிறுவன் பலி

ADDED : செப் 27, 2025 04:47 AM


Google News
பல்லாரி: விளையாடியபடி நடந்து சென்ற நான்கு வயது சிறுவன், சாக்கடையில் விழுந்து உயிரிழந்தான். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்லாரி மாவட்டம், சண்டூர் தாலுகாவின் குரேகுப்பா கிராமத்தில் நேற்று முன் தினம் மாலை, அரவிந்த் என்ற 4 வயது சிறுவன் விளையாடியபடி தன் பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

அப்போது கால் தவறி, திறந்து கிடந்த சாக்கடையில் விழுந்தான். இதை யாரும் கவனிக்கவில்லை.

பாட்டி வீட்டுக்கு சென்ற மகன், இரவாகியும் வீடு திரும்பாததால், கலக்கமடைந்த பெற்றோர், மகனை தேடத்துவங்கினர். பாட்டி வீட்டிலும் இல்லை. சுற்றுப்பகுதிகளில் தேடினர்.

சாக்கடையில் சிறுவன் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுவனை மேலே துாக்கி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். சாக்கடைக்குள் விழுந்து சிறுவன் துடிக்கும் காட்சி, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளாட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என, பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

தோரணகல் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us