Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது ஆம் ஆத்மி நிர்வாகி 'திடுக்'

 பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது ஆம் ஆத்மி நிர்வாகி 'திடுக்'

 பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது ஆம் ஆத்மி நிர்வாகி 'திடுக்'


ADDED : மே 03, 2026 11:32 PM

Follow on Google

ADDED : மே 03, 2026 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''நான் கொலை செய்யப்பட்டால், அதற்கு கே.ஆர்.புரம் - பா.ஜ., எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் நேரடி பொறுப்பாளி,'' என ஆம் ஆத்மி பிரமுகர் சத்யவாணி குற்றம்சாட்டினார்.

பெங்களூரு, கே.ஆர்.புரம் சட்டசபைக்கு உட்பட்ட, விஞ்ஞான நகர் வார்டு ஆம் ஆத்மி தலைவியான சத்யவாணி அளித்த பேட்டி:

தொகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. கடந்த மாதம் தொகுதி முழுதும், எனக்கு எதிராக அவதூறு செய்திகள் கொண்ட 50க்கும் மேற்பட்ட பெரிய பிளக்ஸ்கள், பேனர்கள் வைத்தனர். இதன் மூலம் என் கவுரவத்தை குலைத்தனர்.

இது தொடர்பாக, ஹெச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், தன் செல்வாக்கை பயன்படுத்தி, வழக்கு பதிவாகாமல் தடுத்தார். அதன்பின் லோக் ஆயுக்தா தலையிட்ட பின், வழக்கு பதிவானது. என் வீட்டு முன்பாக நிறுத்தியிருந்த காரை, நேற்றிரவு (முன்தினம்) எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். என்னை அரசியல் ரீதியில் ஒடுக்க முயற்சிக்கின்றனர்.

நான் பல ஆண்டுகளாக, ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறேன். வரும் ஜி.பி.ஏ., தேர்தலில் போட்டியிட தயாராகிறேன். இதனால் எனக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். ஒருவேளை நான் கொலை செய்யப்பட்டால், அதற்கு எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் நேரடி பொறுப்பாளி.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap