தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கல்

 தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கல்

 தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கல்


ADDED : ஜூன் 10, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மோகன் ராஜ், செல்வமணிக்கு கூடுதல் பொறுப்புகளை ஒதுக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

l வனம், சுற்றுச் சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் அஞ்சும் பர்வேஸ், பொது பணி துறை கூடுதல் தலைமை செயலர் பதவியை கூடுதலாக கவனிப்பார்.

l வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் ராஜேந்திர குமார் கட்டாரியா, உள்துறை கூடுதல் தலைமை செயலர் பதவியை கூடுதலாக கவனிப்பார்.

l வீட்டு வசதி துறை செயலர் மோகன் ராஜ், சமூக நலத்துறை செயலராக நியமனம். வீட்டு வசதி துறை செயலர் பதவியை கூடுதலாக கவனிப்பார்.

l போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் செல்வமணி, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநர் பதவியை கூடுதலாக கவனிப்பார்.

l காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ், கர்நாடக நகர குடிநீர் வழங்கல் துறை நிர்வாக இயக்குநராக நியமனம்.

l தொழில் வளர்ச்சி கமிஷனர் குஷ்பு சவுத்ரிக்கு, இன்வெஸ்ட் கர்நாடகா போரம், அரசின் மின்சார தொழிற்சாலை, மைசூரு லேம்ப் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us