Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரசியல்வாதிகளுக்கு தலைவலியான ஏ.ஐ., தொழில்நுட்பம்

அரசியல்வாதிகளுக்கு தலைவலியான ஏ.ஐ., தொழில்நுட்பம்

அரசியல்வாதிகளுக்கு தலைவலியான ஏ.ஐ., தொழில்நுட்பம்


ADDED : பிப் 04, 2026 06:08 AM

Follow on Google

ADDED : பிப் 04, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவது, மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், தொழில்நுட்பங்களை பலரும் தவறாக பயன்படுத்துவது கவலைக்குரியது. சமீப நாட்களாக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அரசியல்வாதிகளுக்குபெரும் தலைவலியாக உள்ளது. ஏ.ஐ., என்ற பெயரை கேட்டாலே அலறுகின்றனர்.

நவீன யுகத்தில் புதிய தொழில்நுட்பங்கள், நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. சமீப நாட்களாக ஏ.ஐ., தொழில்நுட்பம் வேகமாக பரவுகிறது.

பொய்யான வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, மற்றவரின் கவுரவத்தை குலைக்கும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன.

செல்வாக்கு மிக்க தலைவர்களை போன்றே, தத்ரூபமாக வீடியோ உருவாக்கி, சமூக வலைதளங்களில் எதிரிகள் வெளியிடுகின்றனர். அரசியல்வாதிகளையும் ஏ.ஐ., விட்டு வைக்கவில்லை.

அரசியல் எதிரிகளை தர்மசங்கடத்தில் வைக்கும் வகையில், ஏ.ஐ., வீடியோ வெளியிடுகின்றனர். இதற்கு முன் பா.ஜ.,வினர், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர்சிவகுமார் முதல்வர் பதவிக்கு மோதுவதை, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்தனர். அதன்பின் முதல்வரும், துணை முதல்வரும் 'நாம் இருவரும் மாநிலத்தை கொள்ளை அடிக்கிறோம்' என, பேசிக்கொள்வதை போன்று போலியான வீடியோ வெளியாகி, சலசலப்பை ஏற்படுத்தினர்.

இதற்கு பதிலடி கொடுப்பது போன்று, கவர்னர் உரை தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் சார்பில், தங்களின் கட்சியின் வலை தளத்தில், பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசுவது போன்ற போலியான வீடியோக்களை வெளியிட்டனர்.

சமீபத்தில் பல்லாரி கலவரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத்ரெட்டியின் ஆதரவாளர்களின் பெயரில், சில வீடியோக்களை வெளியிட்டனர்.

இவற்றில் பா.ஜ., தலைவர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலுவை போன்ற வீடியோக்களை வெளியிட்டனர்.

அரசியலில் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கவுரவத்தை குலைக்கவோ, தங்கள் கருத்துக்களை மற்றவர் மூலமாக சொல்ல வைத்து பரபரப்பை ஏற்படுத்தவோ, ஏ.ஐ., தொழில்நுட்ப வீடியோக்களை பலரும் பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய வீடியோக்கள் உண்மையான நபர்களை போன்று, தத்ரூபமாக இருப்பதால், இது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதை, பலராலும் புரிந்து கொள்ள முடியாது. இது போன்ற வீடியோக்கள், அரசியல்வாதிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap