/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'கிரஹலட்சுமி' பணத்தை பேத்திக்காக சேமிக்கும் மூதாட்டி 'கிரஹலட்சுமி' பணத்தை பேத்திக்காக சேமிக்கும் மூதாட்டி
'கிரஹலட்சுமி' பணத்தை பேத்திக்காக சேமிக்கும் மூதாட்டி
'கிரஹலட்சுமி' பணத்தை பேத்திக்காக சேமிக்கும் மூதாட்டி
'கிரஹலட்சுமி' பணத்தை பேத்திக்காக சேமிக்கும் மூதாட்டி
ADDED : அக் 04, 2025 11:11 PM
கொப்பால்: 'கிரஹ லட்சுமி' திட்டத்தின் கீழ், தனக்கு கிடைத்த உதவித்தொகையை மூதாட்டி ஒருவர், பேத்தியின் எதிர்காலத்துக்காக சேமித்து வைக்கிறார்.
கர்நாடக காங்கிரஸ் அரசு, 'கிரஹ லட்சுமி' திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கு மாதந்தோறும் கி டைக்கும் 2,000 ரூபாயை, பலரும் சேமித்து வைத்து, நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர்.வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். அதே போன்று, ஒரு மூதாட்டி, தன் பேத்திக்காக, பணத்தை சேமித்து வைக்கிறார்.
கொப்பால் மாவட்ட ம், கங்காவதி தாலுகாவின், ஸ்ரீராமநகரில் வசிப்பவர் சங்கரம்மா, 70. இவர் 'கிரஹ லட்சுமி' திட்டத்தில் தனக்கு கிடைக்கும் தொகையை, 23 மாதங்களாக சேமித்து வைத்து வருகிறார். தன் பேத்தி ரேகாவின் பெயரில் வங்கிக்கணக்கு துவக்கி, அதில் போட்டு வைத்துள்ளார்.
ரே காவுக்கு தாய், தந்தை இல்லை; தன் பாட்டி சங்கரம்மாவின் பராமரிப்பில் வளர்கிறார். பேத்தியின் கல்வி மற்றும் எதிர்காலத்துக்காக, பணத்தை சேமித்து வைத்துள்ளதாக சங்கரம்மா கூறுகிறார்.


