ADDED : மே 13, 2025 11:54 PM

தாவணகெரே : சுங்கச்சாவடியில், மாவட்ட ஆயுதப்படை போலீஸ் ஏட்டு லாரி ஏற்றி கொல்லப்பட்டார். டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தாவணகெரே மாவட்ட ஆயுதப்படை ஏட்டு ராமப்பா பூஜார். நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீசாருடன் ஹெப்பால் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வந்த லாரியை நிறுத்துமாறு ராமப்பா பூஜார் கூறியுள்ளார். ஆனால் லாரி ஓட்டுநர், நிறுத்தவில்லை. லாரியை வேகமாக ஓட்டி, ஏட்டு மீது மோதினார்.
கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியது. சம்பவ இடத்திலேயே ராமப்பா பூஜார் உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார், லாரியை விரட்டி பிடிக்க முயற்சித்தனர், அதற்குள் லாரி வேகமாக சென்றது.
இது குறித்து, எஸ்.பி., உமாபிரசாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர், சுங்கச்சாவடியில் கண்காணிப்பு கேமரா இல்லாததை பார்த்து, நிர்வாகிகளை கடிந்து கொண்டார். இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், ஏட்டை கொன்ற லாரி ஓட்டுநரை, நேற்று காலையில் போலீசார் கைது செய்தனர். அவர், பெலகாவி மாவட்டம், ஹுக்கேரியை சேர்ந்த சுரேஷ் என்று தெரிய வந்து உள்ளது. லாரி ஓட்டும் போது மது அருந்தியிருந்தாரா என்பது குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.


