தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வரும் 20ல் பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்க தேர்தல்

 வரும் 20ல் பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்க தேர்தல்

 வரும் 20ல் பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்க தேர்தல்


ADDED : ஜூன் 17, 2026 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்க தேர்தல், இம்மாதம் 20ம் தேதி நடக்கிறது.

பி.இ.எம்.எல்., தொழிற்சங்க அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியான தங்கவயல் வக்கீல்கள் சங்க பொதுச் செயலர் ஆர்.ஜோதிபாசு அளித்த பேட்டி:

தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்கத்தின் 22-வது தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, இம்மாதம் 20ம் தேதி காலை 6:30 மணிக்கு துவங்கி மாலை 4:00 மணி வரை நடக்கிறது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்றே ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன.

இந்த தேர்தலில், 877 பேர் ஓட்டுப் பதிவு செய்ய தகுதியுள்ளவர்கள். ஜெ.ஏ.சி., எனப்படும் 'ஜாய்ன்ட் ஆக் ஷன் கமிட்டி-' சக்கரம் சின்னத்திலும், டபிள்யு.யு.எப்., எனப்படும் 'ஒர்க்கர்ஸ் யுனிட்டி பாரம்' என்ற அமைப்பினர், சுத்தியல் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

தலைவர், இரு துணை தலைவர்கள், பொதுச் செயலர், இணை செயலர், துணை செயலர், அமைப்பு செயலர், பொருளாளர், 19 செயற்குழு உறுப்பினர்கள்; தொழிலாளர் நல நிதி குழுவில் நான்கு பேர்; கேன்டீன் குழுவில் ஆறு பேர்; ஒர்க்ஸ் கமிட்டிக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, துணை தேர்தல் அதிகாரிகள் சுப்பாராவ், சேஷகிரி, குருதத், டோம்னிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us