பெங்களூரு - ஜோலார்பேட்டை மெமு ரயில் பகுதியாக ரத்து
பெங்களூரு - ஜோலார்பேட்டை மெமு ரயில் பகுதியாக ரத்து
ADDED : மே 02, 2026 03:43 AM
பெங்களூரு: பராமரிப்பு பணிகள் காரணமாக, பெங்களூரு - ஜோலார்பேட்டை மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தண்டவாள பராமரிப்பு பணி, இன்ஜினியரிங் பணிகள் எதிரொலியாக வரும், 5, 7, 12 ம் தேதிகளில், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும் மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஜோலார்பேட்டை வரை ரயில் செல்லாது. அங்கிருந்து, 4 கி.மீ., துாரத்திற்கு முன் உள்ள, சோமநாயக்கனபட்டி ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.
ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக சோமநாயக்கனபட்டியில் இருந்து ரயில் புறப்படும்.
இதேபோல பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து யோக் நகரி ரிஷிகேஷுக்கு வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஏப்ரல், 30 ம் தேதியுடன் நிறுத்தப்பட இருந்தது. ஆனால், இந்த ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வரும், 7ம் தேதி முதல் ஜூலை 9ம் தேதி வரை, வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று ரயில் இயக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
