/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓட்டு மோசடி மூலம் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அமைச்சர் எச்.கே.பாட்டீல் கண்டுபிடிப்பு ஓட்டு மோசடி மூலம் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அமைச்சர் எச்.கே.பாட்டீல் கண்டுபிடிப்பு
ஓட்டு மோசடி மூலம் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அமைச்சர் எச்.கே.பாட்டீல் கண்டுபிடிப்பு
ஓட்டு மோசடி மூலம் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அமைச்சர் எச்.கே.பாட்டீல் கண்டுபிடிப்பு
ஓட்டு மோசடி மூலம் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அமைச்சர் எச்.கே.பாட்டீல் கண்டுபிடிப்பு
ADDED : செப் 23, 2025 11:47 PM

கதக் : ' 'ஓட்டு மோசடி மூலம் மத்தியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. கையெழுத்து சேகரிப்பு மூலம் பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்,'' என, மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
கதக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஓட்டு மோசடியை எதிர்க்கும் கையெழுத்து பிரசாரத்தை, எச்.கே.பாட்டீல் துவக்கி வைத்தார். பின், அவர் பேசியதாவது:
ஓட்டு மோசடி குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதால், தேர்தல் கமிஷன் நடுங்க துவங்கி உள்ளது. ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டிய தேர்தல் கமிஷனுக்கு பதிலாக, பா.ஜ., பதிலளித்து வருகிறது. ஓட்டு மோசடி மூலம் மத்தியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. கையெழுத்து சேகரிப்பு மூலம் பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
கடந்த 2008 தேர்தலில் தோற்றோம். மக்களின் ஆசிர்வாதத்துக்கு தலை வணங்கினோம். 2013ல் கதக் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகளும், தாசில்தார்களும் தவறு செய்தனர். கதக் தொகுதியில், 18,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தேன். அரசியல் வரலாற்றில் இதுபோன்று ஓட்டு மோசடி நடந்ததில்லை. தேர்தல் ஓட்டுச்சீட்டு குறித்து ராகுல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, காங்கிரஸ் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமானால், காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். 2018ல் சட்டசபை சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். தேர்தல்களில் நன்கொடைகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஹேக்கிங், ஓட்டுச்சீட்டில் தவறான தகவல்கள் குறிப்பிட்டிருந்தன. 19 லட்சம் மின்னணு ஓட்டு இயந்திரங்கள், திருடப்பட்டதாக தேர்தல் கமிஷனில் வழக்குப் பதிவாகி உள்ளது. இதற்கு பதில் அளிக்க வேண்டும்.
எனவே, முதல்வர் சித்தராமையா அரசு, தேர்தல் கமிஷனை சாடி உள்ளது. புதிய வாக்காளர் பட்டியல் உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு ஓட்டு இயந்திரங்களுக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.