Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிருங்கேரி மறு ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ., ஓட்டு திருட்டு

 சிருங்கேரி மறு ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ., ஓட்டு திருட்டு

 சிருங்கேரி மறு ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ., ஓட்டு திருட்டு


ADDED : மே 06, 2026 04:00 AM

Follow on Google

ADDED : மே 06, 2026 04:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''சிருங்கேரியில் நடந்த மறு ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜ., ஓட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிகிறது,'' என, முதல்வர் சித்தராமையா கூறினார்.

சிருங்கேரி மறு ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜ.,வின் ஜீவராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. இது, அரசின் சாதனைகளுக்கும், காங்கிரசின் சித்தாந்தங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களையும், பண பலத்தையும் மீறி, இவ்விரு தொகுதிகளின் வாக்காளர்களும், காங்கிரசின் மீதும், அரசின் மீதும் நம்பிக்கை வைத்து ஓட்டளித்து உள்ளனர். அடுத்த சட்டசபை தேர்தலிலும், மாநில வாக்காளர்கள், இதுபோன்று ஆசிர்வதிப்பார்கள் என, உறுதியாக நம்புகிறோம்.

சிருங்கேரியில் நடந்த மறு ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜ., ஓட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. மறு ஓட்டு எண்ணிக்கையின் போது, ராஜேகவுடாவின் 255 ஓட்டுகள் திட்டமிட்டு திருத்தப்பட்டு உள்ளன.

முதல் முறையாக, 2023ல் ஓட்டுகள் எண்ணப்பட்ட போது மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ., அரசு இருந்தது. அவர்களை பொறுத்த வரை, இரட்டை இன்ஜின் அரசு இருந்தது. பா.ஜ., ஊழியர்கள், ஓட்டு சீட்டுகளில் முறைகேடு செய்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இது, ஒரு குற்றச்செயலாகும். மூன்றாவது சுற்றில் ராஜேகவுடா பெற்ற, 170 தபால் ஓட்டுகளும், தற்போது செல்லாதவையாகி விட்டன.

இது தொடர்பாக, எங்கள் கட்சியின் முகவராக சுதிர் குமார் முரளி இருந்தார். 2023ல் அனைத்து கட்சி முகவர்களும் கையெழுத்திட்ட ஆவணம் உள்ளது. ஓட்டுகள் தகுதியற்றவையாக இருந்திருந்தால், அப்போதே அனைவரும் ஆட்சேபனை தெரிவித்திருக்கலாம். ஏன் ஆட்பேசனை தெரிவிக்கவில்லை.

நாட்டின் அனைத்து மதசார்பற்ற மற்றும் ஜனநாயக மக்கள் சார்பில், கர்நாடகா மற்றும் தெலுங்கானா உட்பட தென் மாநிலங்களில் பா.ஜ.,வின் மதவாத அரசியலுக்கு இடமில்லை என்ற தெளிவான செய்தியை வழங்கிய கேரளா, தமிழக வாக்காளர்களை வாழ்த்துகிறேன்.

கேரள சட்டசபை தேர்தலில், காங்கிரசின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டது. வேட்பாளர் தேர்வு முதல் பிரசார வியூகம் வரை அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்கள் அனைத்தையும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடத்தி உள்ளனர்.

கேரள காங்கிரஸ் கட்சி விரைவில் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிப்படி செயல்பட்டு, நாடு முழுவதும் ஒரு முன் மாதிரியாக திகழும் ஆட்சியை வழங்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, கர்நாடகா காங்கிரசின் பலத்தை அதிகரித்து உள்ளது.

மூன்று முறை முதல்வராக இருந்த மம்தா பானர்ஜிக்கு எதிராக இயல்பாகவே, ஒரு வலுவான எதிர்ப்பு அலை இருந்தது. அதனுடன் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் நடந்த மோசடி உட்பட, மத்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளாலும், மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

சிறப்பு வாக்காளர் திருத்தத்தில், அவருக்கு ஆதரவாக இருந்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அரசு இயந்திரத்தை பா.ஜ., தவறாக பயன்படுத்தியும், ஆயுத பலத்தையும், பண பலத்தையும் சர்வாதிகார முறையில் கையாண்டும் இந்த வெற்றியை அடைந்து உள்ளது.

மேற்குவங்கத்தில் பா.ஜ.,வின் வெற்றி என்பது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கே ஏற்பட்ட தோல்வி என்பது தான் உண்மை; ஓட்டுகளை மதரீதியாக பிளவுபடுத்தும் தந்திரத்தை பா.ஜ., கையாண்டு வெற்றி பெற்றுள்ளது. தாங்கள் செய்த தவறை விரைவில் உணர்ந்து, அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை மேற்குவங்க வாக்காளர்கள் தோற்கடிப்பர்.

தமிழக தேர்தலில் இத்தகைய மாபெரும் முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. ஆட்சிக்கு எதிரான அலை வீசியபோதிலும், அங்குள்ள மக்கள், தி.மு.க., அரசின் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தையும், திட்டங்களையும் பாராட்டினர்.

பா.ஜ.,வின் மதவாத அரசியலை, ஒரு போதும் சகித்து கொள்ளாத தமிழ் வாக்காளர்கள், இன்று வரை விவேகமாக ஓட்டளித்துள்ளனர். இருப்பினும், தமிழ் இளைஞர்களும், பெண்களும், நடிகர் விஜய்யின் கவர்ச்சிக்கு இரையானது வருத்தம் அளிக்கிறது. தி.மு.க.,வின் தோல்வி, தமிழகத்தின் திராவிட அரசியலுக்கு பெரும் பின்னடைவாகும்.

இந்த தோல்வியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் மீண்டு வர வேண்டும். அதேநேரத்தில், நடிகர் விஜயின் எதிர்பாராத மற்றும் முன்னெப்போதும் இல்லாத இந்த வெற்றிக்கு, வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap