/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லாக்கரில் இருந்த நகை மாயம் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு லாக்கரில் இருந்த நகை மாயம் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு
லாக்கரில் இருந்த நகை மாயம் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு
லாக்கரில் இருந்த நகை மாயம் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு
லாக்கரில் இருந்த நகை மாயம் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு
ADDED : ஜூன் 02, 2025 12:34 AM
சதாசிவநகர் : லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 145 கிராம் தங்கநகை மாயமானது பற்றி, பெண் வாடிக்கையாளர் அளித்த புகாரில் வங்கி மேலாளர், துணை மேலாளர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரு சிக்கமாரனஹள்ளியில் எஸ்.பி.ஐ., வங்கி உள்ளது. இங்கு கடந்த 2022ம் ஆண்டு பிந்து என்பவர் வங்கிக்கணக்கு துவக்கினார். பின், வங்கியில் ஒரு லாக்கரை பெற்று அதில் தனது 145 கிராம் நகைகளை வைத்து இருந்தார். லாக்கர் சாவி பிந்துவிடம் இருந்தது.
கடந்த மார்ச் 29ம் தேதி, வங்கிக்கு சென்று லாக்கரை திறந்து பார்த்த போது, அதற்குள் நகை இல்லை. அதிர்ச்சி அடைந்த பிந்து, வங்கி மேலாளர் பாரதீஷ், துணை மேலாளர் பில்ஜித் ஜான் ஆகியோரிடம் சென்று கேட்டார். நகை மாயமானது பற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டார்.
நகை வாங்கியதற்கான பில்லை கொண்டு வந்து, வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கும்படி கூறி விட்டனர். நகைக்கான பில்லை கொடுத்து பிந்து புகார் செய்தார். ஆனால் வங்கி தரப்பில் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
இதனால் கடுப்பான பிந்து, பாரதீஷ், பில்ஜித் ஜான் மீது சதாசிவநகர் போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் இருவர் மீதும் வழக்குப் பதிவானது. விசாரணை நடக்கிறது.